பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

காந்தியத் திட்டம்

சக்கரத்துள் சுற்றிச் சுற்றி வருவது போலத்தான். ஏனென்றால், வேலை கொடுப்பதே ஒரு திட்டத்தின் குறிக்கோளாக இருக்க முடியாது; திட்டம் என்பது ஒரு முடிவை அடைவதற்குரிய வழியைத் தவிர வேறில்லை. ஒரு தேசத்தின் இயற்கை வசதிகளையும், மக்களின் உழைப்புச் சக்தியையும் பூரணமாக உபயோகித்துக் கொண்டு, பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதே திட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. உற்பத்திப் பெருக்கு, யந்திரத் தொழில் பெருக்கு இவற்றின் விளைவு, செல்வச் செழிப்பின் மத்தியிலே, பரம தரித்திரம் தாண்டவமாடுவதுதான்! இது வெட்ட வெளிச்சம்; விளக்கத் தேவையில்லை.

ஆகவே, நம்முடைய திட்டம் எதைத்தான் நோக்கமாகக் கொள்ள வேண்டும்? ஆசிரியர் கோல் கூறுகிறார்: ‘கிடைக்கக் கூடிய உற்பத்திச் சாதனங்களையெல்லாம் அரசு உபயோகிக்க வேண்டும்; வருமானத்தை வினியோகிப்பதிலும் திட்டம் இருக்க வேண்டும்; இதனால், பொதுஜன க்ஷேமத்திற்கும் தனி நபர்கள் வாங்கி உ.பயோகிக்கும் பொருள்களின் அளவுக்கும், இயன்ற வரை முரண்பாடில்லாதபடி வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்; இவைகளை முக்கிய நியமங்களாகக் கொண்டு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்’. [1] ‘திட்டம் எந்தச் சமூகத்திற்கு உபயோகிக்கப்படுகிறதோ, அந்தச் சமூகம், நீதி நெறி நின்று, சாத்வீகமாயும், ஒழுக்கம் நிறைந்ததாயும், அறிவு வளர்ச்சியுடையதாயும் மாறுவதற்குப் பயன்பட வேண்டும்; சமூகத்திலுள்ள ஆடவரும், பெண்டிரும் தனி மனித சுதந்திரத்தை இழக்காமல் பொறுப்புள்ளவர்களாக இருக்கும்படி செய்ய வேண்டும்’[2]. இதுவே ஒரு நல்ல திட்டத்திற்கு ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லீ குறிப்பிடும் உரை கல். எம். என். ராய்


  1. * ‘Principles of Economic Planning—பொருளாதாரத் திட்டம் வகுக்கும் நியமங்கள்.’
  2. ‘Ends and Means—லட்சியங்களும் மார்க்கங்களும்’, பக்கம். 32.