பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 காந்தியத் திட்டம் னில் இந்திய ஜனத்தொகையில் பத்தில் ஒன்பது பகுதி யினர் கிராமங்களிலேயே வசிக்கின்றனர். பாமர ஜனங்க ளோடு இரண்டறக் கலந்தும், குறைந்த சம்பளங்களில் வேலை செய்தும் வரக்கூடிய ஆயிரக் கணக்கான இளைஞர் களே இந்தத் திட்டத்தை - அல்லது எந்தத் திட்டத்தை யுமே - உண்மையில் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்க முடியும். உண்மையான ஒரு தேசீய அாசாங்கமே நம் வாலி பர்களுக்கு ஊக்கமளித்து உணர்ச்சியூட்ட முடியும் என்பது வெள்ளிடை மலை. எல்லாப் பிரிவுகளையும் சேர்த்தால் கல்விச் செலவு கீழே குறித்துள்ள அளவுக்கு வரும் : (கோடிக் கணக்கான ரூபாய்) முதலீட்டுச் வருஷாங்கர செலவு கடப்புச் செலவு அடிப்படைக் கல்வி ... 100 25 நடுத்தரக் கல்வி * = + 50 90 முதியோர் கல்வி # = + 70. = சர்வகலாசாலைக் கல்வி... -- 5 ஊழியர் பயிற்சி ... 75. 50。 மொத்தம் 295 100 (உ) ஆராய்ச்சி - ஊழியர்களைத் தயாரிப்பதற்காகக் குறிப்பிட்ட விஷயங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்வதிலேயே ஏராளமான ஆராய்ச்சியும் செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் பயிற்சிக்கு ரூ. 75 கோடி கிட்டம் செய்திருப்ப்தில், தேசியப் புனருத்தாரண வேலை யில் பலவேறு பிரிவுகள் சம்பந்தமான ஆராய்ச்சிக்கும் இயற்கையாகவே சில கோடி ரூபாய் செலவாகத்தான் செய்யும். எனினும், ஆராய்ச்சி வேலைக்காக மட்டும் தனி யாக ரூ. 80 கோடி கூடுதலாக ஒதுக்கி வைக்கலாம். இம்,கக் திட்டத்தின் கால அளவில், பல இன களி லும் rம்படக்கூடிய மொத்தச் செலவு வருமாறு: