பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் i. 217 சிருஷ்டிக்கப்படும் செலாவணி *-யுத்தத்திற்குப் பின் ளுல் ஏற்படுத்தப்படும் ஜனப் பிரதிநிதிகளேக் கொண்ட சர்க்காரின் பொது கிதி பலப்பட்டு ஸ்திரமா யிருக்கும் என்ற விஷயத்தில் ஜனங்கள் நம்பிக்கை கொள்வார்கள். இந்த கம்பிக்கையை ஆதாரமாய்க் கொண்டு, தேசிய சர்க்கார் தாற்காலிகமான ஜாமீன் பத்திரங்கள் (செக்யூ ரிட்டிகள்) மூலம் புது நாணயம் சிருஷ்டிக்க முடியும் . செலாவணியின் மதிப்பை ஸ்திரப் படுத்துவது, செலா வணி விக்கத்தைத் தடுப்பது போன்ற சிக்கல்களே உண் டாக்காமலே, இந்த முறையில் ரூ. 1,000 கோடி பெற முடியும்.t * வரி விதித்தல் - வருமான வரி, அமிதலாப வரி, கம் பெனி வரி ஆகிய வரிகளின் படிகளே அதிகமாக உயர்த் தல், மரண வரி அல்லது வாரிசு வரி, விவசாய வரு மானத்தில் கியாயமான ஒரளவுக்கு மேற்பட்ட் வருமானங் களுக்கு வரி விதித்தல், விற்பனே வரிகள் முதலியவை

  • நாணயங்களையும் காகித-காணயங்களான கோட்டுக் களையும் வெளியிடும் பொழுது, சர்க்கார் இவைகளுக்கு ஈடாகத் தன் பாங்கிகளில் போதுமான தங்கத்தை இருப்பு வைத்துக்கொள்ளும். போதுமான அளவு தங்க இருப்பில்லா மலே, சில சமயங்களில் அதிகமாகக் காகித-காணயம் வெளி யிடப்படலாம். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு சர்க்காருக்குத் தேவையான தொகை கிடைக்கும். கடன் வாங்காமலும் வரி விதிக்காமலும் பணம் பெறுவதற்கு இந்த முறை கையாளப்படும். செலாவணி சிருஷ்டிக்கப்படுவ தாக ச் சொல்வதன் பொருள் இதுதான். -

t செலாவணி வீக்கம்-சில விதிக ளேப் புறக்கணித்து, குறிப்பிட்ட ஒரளவுக்கு மேல் காகித-நாணயத்தை அதிகமாக வெளியிடுவது இந்தப் பெயரால் குறிக்கப்படுகிறது. தேசத்தில் உற்பத்தியும், பொருளாதார முயற்சியும்,வர்த்தக மும் போதிய அளவு பெருகாமல், ஜனங்களிடையே பரவி வரும் செலாவணியின் அளவு மட்டும் பெருகுவதையே செலாவணி விக்கம் அல்லது பண வீக்கம் ' என்று சொல்லுகிருேம். இவ்வாறு பண வீக்கம் ஏற்படும்போது, செலாவணியின் மதிப்பு குறைந்து பொருள்களிள் விலை வாசிகள் உயருகின்றன.