பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காந்தியத் திட்ட்ம் கொள்பவராக இருந்தால்தான், ஜனநாயகம் பிழைக்க முடியும் - அந்த கிலேயில்தான் அது பிறக்கவே முடி யும் - என்பதை நிச்சயமாக நம்புங்கள்." அஹிம்ஸை காந்தியப் பொருளாதாரத் தத்துவத்தின் அடிப் படையான இரண்டாவது கொள்கை அஹிம்ஸ்ை. எத்தகைய ஹிம்ஸையும் நம்மை கிரந்தரமான சமாதானத் திலும், சமூகப் பொருளாதாரப் புனருத்தாரணத்திலும் கொண்டுபோய்ச் சேர்க்காது என்று காந்திஜி நம்புகிரு.ர். அத்றிம்ஸையை அனுஷ்டிக்கும் சமூகத்தில்தான் உண்மை யான ஜனநாயகத்தையும், மானிடப் பண்பின் வளர்ச்சி யையும் எதிர்பார்க்க முடியும். ஹிம்ஸை அதிக விம்ஸ்ை யையே தோற்றுவிக்கும், ஹிம்ஸையால் பெற்ற எதையும் முன்னிலும் அதிகமான் ஹிம்ஸையாலேயே பாதுகாக்க முடியும். ஹிம்ஸை என்பது உண்மைச் சுதந்திரத்திற்கு முரண்பட்டது, அதன் மூலம் 'அடையும் சுதந்திரமும் இரத்தக் கறை தோய்ந்ததாகவே இருக்கும். வாள் எடுப்பவர் வாளாலேயே மடிவர். ஆதலால் காந்திஜி ஹிம்ஸ்ை முறையை எள்ளளவும் ஆதரிக்கமாட்டார். திட்டப்படி அமைக்கும் சமூகத்தில் திட்டம் ஒர் உபாயமே, இறுதி லட்சியமன் அ. திட்டம் போ டு வ தே ஒரு லட்சியம் என்று மதிக்கப்பட்டாலும், லட்சியம் நல்ல தாயின் எந்த வழியும் நியாயமே என்ற கொள்கைய்ை அவர் ஒப்புக்கொள்வதில்லை. முடிவு புனிதமாக இருக்கும் படி காப்பதற்கு, அதை அடையும் வழியும் அதைப் போலவே புனிதமாக இருக்கவேண்டும். இதனுல்தான் காந்திஜி, அபேதவாத சமூகத்தைக் கூடப் பலாத்கர்ரப் புரட்சியாலன்றி, அஹிம்ஸை மூலமாகவே அமைக்க வேண்டும் என்று தீர்மானமாய்க் கூறுகிரு.ர். அஹறிம்ஸை பற்றிய இந்தக் கருத்து ஏதோ மத சம்பந்தமான உணர்ச்சி அன்று என்பதை நான் கூற விரும்புகிறேன். அதன் அவசியத்தையும் முக்கியத்தை

  • "The Modern State-z bærev og frá z h'; L # * b 161.