பக்கம்:கானகத்தின் குரல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காணகத்தின் குரல் சேர்ந்து பக்கைப் பிடித்து இழுத்துத் துரத்திவிட்டார்கள். ரண வைத்தியன் ஒருவன் காயங்களிலிருந்து ரத்தம் ஒழுகாதவாறு சிகிச்சை புரிந்தான். பக் சீறிக்கொண்டும் உறுமிக்கொண்டும் மீண்டும் மீண்டும் கடைக்குள்ளே நுழைய முயன்றது. பலர் தடிகளை விசிக்கொண்டு தடுத்ததால்தான் அது உள்ளே வராமல் நின்றது. கரங்கக்காரர்களின் கூட்டம் ஒன்று உடனே அங்கே கூடியது. எஜமானனைத் தாக்கியதால்தான் பக் கோபமடைந்து பர்ட்டன் மேல் பாய்ந்தது என்றும், அதன் மேல் தவறில்லை என்றும் கூட்டத்தில் தீர்மானித்தார்கள். பக்கின் கீர்த்தி அன்று முதல் ஓங்கியது. அலாஸ்காவில் உள்ள ஒவ்வொரு முகாமிலும் பக்கைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அந்த ஆண்டின் இலையுதிர் காலத்திலே தார்ன்டனுடைய உயிரைப் பக் வேறொரு வகையில் காப்பாற்றியது. வேகம் மிக அதிகமாகவுள்ள ஓர் ஆற்றுப்பகுதியிலே ஒரு நீண்ட படகைச் செலுத்த வேண்டியிருந்தது. படகில் கட்டியிருந்த ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹான்ஸும் பீட்டும் தரையின் மேல் சென்றனர். பக்கத்திலுள்ள மரங்களோடு கயிற்றைச்சேர்த்துப் பிடித்துப் படகின் வேகத்தை அவர்கள் குறைக்க முயன்றார்கள். தார்ன்டன் படகிலிருந்து கொண்டு ஒரு கம்பின் உதவியால் அதை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருந்தான். கரையில் வருகின்ற கூட்டாளிகள் என்ன செய்யவேண்டுமென்றும் அவன் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான். படகுக்கு நேராகவே பக் கரையில் நடந்துவந்தது. தார்ன்டனுக்கு ஆபத்து நேரக்கூடாதென்று அதற்குக் கவலை; அதனால் அவனையே பார்த்துக்கொண்டு நடந்தது. ஓரிடத்திலே பல பாறைகள் கறையிலிருந்து ஆற்றுக்குள் துருத்திக்கொண்டு நீர்மட்டத்திற்கு மேலாக நின்றன. அதனால் ஹான்ஸும் பீட்டும் கயிற்றைத் தளர்த்திவிட்டு விட்டார்கள். தார்ன்டன் தன் கையிலுள்ள கோலால் படகைச் செலுத்தினான். அந்தப் பாறைகளை கடந்ததும் ஆற்றுவெள்ளம் மிகப் பயங்கரமாகப் பாய்ந்தது. அந்தப் பகுதிக்குப் படகு வந்ததும் ஹான்ஸும் பீட்டும் மறுபடியும் கயிற்றால் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தத் திடீரென்று முயன்றனர். அதனால் படகின் வேகம் சட்டென்று குறையவே தார்ன்டன் படகிலிருந்து வெள்ளத்தில் விழுந்தான். வெள்ளத்தின் இழுப்பு அதிவேகமாக உள்ள பகுதியை அவன் அடைந்துவிட்டான். அந்தப் பகுதியிலே நீந்தி உயிரோடு கரை சேருவதென்பது இயலாத காரியம். பக் வெள்ளத்திலே தாவிப்பாய்ந்தது. கொந்தளித்துச் சுழித்தோடும் வெள்ளத்திலே முந்நூறு கஜம் நீந்தி அது தார்ன்டனை அடைந்தது.