பக்கம்:கானகத்தின் குரல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஜாக் லண்டன் 10 கண்களையும் நாவினால் நக்கிற்று. தார்ன்டனுக்குப் பல இடங்களில் காயமேற்பட்டிருந்தது. அவற்றைப் பொருட்படுத்தாமல் அவன் பக்கின் உடம்பை நன்றாகத் தடவிப்பார்த்தான். அதன் விலா எலும்புகள் மூன்று முறிந்திருந்தன. பிறகு மெதுவாகப் பக் சுயஉணர்வு பெற்றது. "நாம் கொஞ்ச நாட்களுக்கு இங்கேயே முகாம் போட்டாக வேண்டும்' என்று தார்ன்டன் கூறினான். முறிந்துபோன விலா எலும்புகள் மறுபடியும் ஒன்றுகூடி பக் நன்றாகப் பிரயாணம் செய்யக் கூடிய நிலைமையை எய்தும் வரை அவர்கள் அங்கேயே தங்கினார்கள். அடுத்த மாரிக்காலத்தில் அவர்கள் டாஸ்னிலிருந்தபோது பக் மற்றோர் அரிய காரியத்தைச் சாதித்தது. அந்தச் செயல் வீரம் செறிந்ததாக இல்லாவிடினும் பக்குக்கும் மிகுந்த புகழைத் தந்தது. அதனால் மூன்று கூட்டாளிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதன் மூலமாக அவர்களுடைய நெடுங்கால ஆசை நிறைவேற லாயிற்று. சுரங்கக்கனிகளை நாடி யாரும் இதுவரையில் கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லவில்லை. அங்கே போவதற்கு அவர்களுக்கு அதனால் வசதி ஏற்பட்டது. எல்டராடோ உணவுவிடுதியிலே பல பேர் பேசிக் கொண்டிருந் தார்கள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான நாய்களைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசினர். பக்கைக் குறித்தும் அங்கே பேச்செழுந்தது. தார்ன்டன் அதைப் பெரிதும் ஆதரித்துப் பேசலானான். அரை மணி நேரம் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பிறகு ஒருவன் தன்னுடைய நாய் ஐநூறு ராத்தல் சுமையோடு சறுக்கு வண்டியை இழுத்துக்கொண்டு போகும் என்று கூறினான். மற்றொருவன் தன்னுடைய நாய் அறுநூறு ராத்தல் சுமையை இழுக்கும் என்று பெருமை அடித்தான். மற்றொருவன் தன்னுடைய நாய் எழுநூறு ராத்தல் சுமையை இழுக்கும் என்றான். 'சே, இவ்வளவுதானா? ஆயிரம் ராத்தல் சுமையை வண்டியில் வைத்து நிறுத்தினால் பக் அதை இழுத்துக்கொண்டு போய்விடும்" என்றான் ஜான் தார்ன்டன். 'நிற்கும் வண்டியை அது அசைத்து நகர்த்திவிடுமா? மேலும் நூறு கஜத்திற்கு அந்த வண்டியை இழுத்துக்கொண்டும் போகுமா?’ என்று மத்தேயுஸன் கேட்டான். அவன் 'பொனான்ஸா ராஜா. அவன் தொட்டதெல்லாம் தங்கமாகும். அவன்தான் தன்னுடைய நாய் எழுநூறு ராத்தல் சுைைமயை இழுக்கும் என்று கூறியவன். 'ஓ! நிற்கும் வண்டியை அசைத்து நகர்த்தி நூறு கஜத்திற்கு இழுத்துக் கொண்டுபோய்விடும்' என்று ஜான் தார்ன்டன் அமைதியாய்க் கூறினான்.