பக்கம்:கானகத்தின் குரல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் ! 125 சூழ்ந்துகொள்ளாமலிருப்பதற்காக அது மெதுவாகப் பின்னால் நகர்ந்துகொண்டு குட்டையின் கரையையும், ஓடையையும் கடந்து உயரமாக நின்ற ஒரு சரளைக்கல் பாறை வரை சென்றது. சரளைக்கல் பாறையில் சுரங்கம் வைத்து செங்கோண வடிவத்திலே ஒரு பகுதியை யாரோ உடைத்திருந்தார்கள். பின்புறமாகவே நகர்ந்து அந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்துகொண்டு பக் ஓநாய்களை எதிர்க்கலாயிற்று. பாறையில் ஏற்பட்டிருந்த கோணஅமைப்பால் முன்புறத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் பக்கைத் தாக்க முடியாது. அந்த இடத்திலிருந்து அது நன்றாக எதிர்த்து நின்றபடியால் அரைமணி நேரத்திற்குள் ஓநாய்கள் தோல்வியுற்றுப் பின்வாங்கின. அவைகள் களைப்பால் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு மூச்சுவாங்கின. அவற்றின் வெண்மையான கோரப்பற்கள் நிலவொளியிலே குரூரமாகத் தோற்றமளித்தன. சில ஒநாய்கள் தலையை உயர்த்திக்கொண்டும், காதுகளை முன்னால் மடித்துக் கொண்டும் படுத்திருந்தன. வேறு சில ஒநாய்கள் குட்டையிலே தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. நீண்ட, ஒல்லியான ஒரு சாம்பல் நிற ஒநாய் சிநேகபாவத்தோடும், எச்சரிக்கையோடும் முன்னால் வந்தது. பக் அதை உடனே தெரிந்துகொண்டது. அந்த ஒநாயோடுதான் முன்பு பக் ஒர் இரவும் பகலுமாகக் காட்டுப் பிரதேசத்திலே ஒடிக்கொண்டிருந்தது. அந்த ஒநாய் மெதுவாகக் குரல் எழுப்பிற்று, பக்கும் குரல் எழுப்பிற்று. இரண்டும் மூக்கோடு மூக்கை வைத்துக்கொண்டன. பல சண்டைகளில் தழும்பேறிய ஒல்லியான முதிய ஓநாய் ஒன்று முன்னால் வந்தது. சீறத் தொடங்குவதுபோல பக் உதட்டை மடித்தது; ஆனால் பிறகு அந்த முதிய ஓநாயின் மூக்கோடு மூக்கு வைத்து மோப்பம் பிடித்தது. அதைக் கண்டதும் அந்த முதிய ஒநாய் தரையில் அமர்ந்து நிலாவைப் பார்த்துக்கொண்டு, நீளமாய் ஊளையிட லாயிற்று. அதைப்போலவே மற்ற ஒநாய்களும் அமர்ந்து ஊளையிட்டன. இப்பொழுது மீண்டும் தெளிவான குரலிலே பக்குக்கு அழைப்பு வந்ததாகத் தோன்றியது. அதுவும் தரையில் அமர்ந்து ஊளையிட்டது. ஊளையிட்டு முடிந்ததும் பாறையிலுள்ள கோணத்தைவிட்டு அது முன்னால் வந்தது. ஒநாய்கள் அதைச் சுற்றிக்கொண்டு நட்புமுறையிலும், காட்டுவிலங்கின் முறையிலும் அதை முகர்ந்து பார்க்கலாயின. அந்தக் கூட்டத்திலே தலைமை வகிக்கும் ஓநாய்கள் ஒரு வகையாகக் குரல் கொடுத்துக்கொண்டு காட்டை நோக்கி ஓடின. மற்ற ஒநாய்களும் அதேமாதிரி குரல்