பக்கம்:கானகத்தின் குரல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கன்னகத்தின் குரல் கொடுத்துக்கொண்டு பின்னால் ஓடின. முன்பே பழகியுள்ள ஒநாய்க்குப் பக்கத்திலே பக்கும் குரல் கொடுத்துக்கொண்டு அவைகளோடு ஒன்றாய் ஒடலாயிற்று. பக்கின் கதை இத்துடன் முடிவுறுவதாகக் கருதலாம். சில ஆண்டுகளுக்குள் ஓநாய்களின் வர்க்கத்திலே ஒரு புதிய மாறுதலை ஈஹட்டுக்கள் கண்டார்கள். சில ஒநாய்களின் தலையிலும் மூக்கிலும் பழுப்பு நிறமான புள்ளிகளும், மார்பிலே வெண்மையான உரோமத் தாரைகளும் இருந்தன. ஓநாய்களின் தலைமையிலே பேய்நாய் ஒன்று வருவதாகவும் ஈஹட்டுக்கள் கூறிக்கொண்டார்கள். அந்தப் பேய் நாயிடத்திலே அவர்களுக்கு மிகுந்த பயம். ஏனென்றால் அவர்களைக் காட்டிலும் அது அதிகத் தந்திரம் உடையதாக இருந்தது. கடுமையான குளிர்க்காலங்களிலே அது அவர்களுடைய முகாம்களிலே புகுந்து திருடுகிறது; அவர்கள் வைக்கும் வளைகளையே தூக்கிக்கொண்டு போய்விடுகிறது. அவர்களுடைய நாய்களைக் கொன்றுவிடுகிறது. அவர்களிலே மிகுந்த தைரியமுள்ள வேட்டைக்காரர்களையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கிறது. இவை மட்டுமல்ல; அதன் அட்டகாசம் இன்னும் மோசமாயிற்று. பல வேட்டைக்காரர்கள் முகாம்களுக்குத் திரும்பாமலே மறைந்துவிடுகிறார்கள். சில வேட்டைக்காரர்கள் குரல் வளை கிழிபட்டுப் பனிப்பரப்பிலே கிடப்பதையும், அவர்களைச் சுற்றி ஒநாய்அடிகளைவிடப் பெரிய பாதங்களால் ஏற்பட்ட சுவடுகளிருப்பதையும் பல பேர் காணலானார்கள். இலையுதிர்க் காலத்திலே பணிமான்களைத் தொடர்ந்து வேட்டையாடச் செல்லும் ஈஹட்டுக்கள் ஒரு பள்ளத்தாக்குக்குள் மட்டும் நுழையமாட்டார்கள். ஏதோ ஒரு துஷ்டப்பேய் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்து தங்கி அங்கேயே குடியிருப்பதாக ஒவ்வொரு முகாமிலும் பேச்செழுந்தது. அதைக் கேட்டுப் பெண்களெல்லாம் மனம் சோரலாயினர். அந்தப் பள்ளத்தாக்குக்குக் கோடைகாலத்திலே ஒரு பிராணி வருவதை ஈஹட்டுக்கள் அறியார்கள். செறிந்த, பளபளப்பான உரோமக் கட்டுடைய ஒநாய் அது என்று கூறலாம். ஆனால், அது ஒநாய்களிலிருந்து மாறுபட்டது. செழித்து விளங்கும் காட்டுப்பகுதியை விட்டு அது தனியாக மரங்களுக்கிடையில் உள்ள திறந்தவெளிக்கு வரும். அந்த இடத்திலே நைந்துபோன பணிமான் தோல்மூட்டைகளின் வழியாக ஒருமஞ்சள் நிறமான ஓடை ஒடிப் பூமியிலே மறைகின்றது. அங்கே நீண்ட புல்லும், செடிகளும், புதர்களும் தழைத்து அதன் மஞ்சள் நிறத்தின்மேல் சூரியகிரணங்கள் படாதவாறு மறைக்கின்றன. அந்தப் பிராணி அங்கு வந்து நின்று