பக்கம்:கானகத்தின் குரல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 கத்தின் ஆல் அடிப்பவர்களைத் துரத்திப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு ஒன்றுக்கொன்று நேர்மாறான அனுபவங்களைப் பெறுவதில் அவருக்கு மிகுந்த ஆர்வம். நீதிநெறியைப் பற்றிய எண்ணமே அதிலில்லை. ஒழுக்கக் குறைவும், பெருங்குடியும் அவருடைய # ಓ.. ಓ... # # உடலுறுதியையும் குலைத்து அவருடைய ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவித்தன. அவர் தமது பதினேழாம் பிறந்த நாளன்று கடல்நாய் வேட்டைக் கப்பல் ஒன்றில் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டு ஜப்பான் முதலிய பகுதிகளுக்குப் புதப்பட்டார். ப் பிரயாணம் அவருக்கு தன்மையாக முடிந்தது. கடலில் போது பல நாட்களுக்கு மிகுந்த வேலை இருக்கும்: துறைமுகங்கள் தங்கும்போது அவர் இஷ்டப்படியெல்லாம் இசிவார். ஒக்லாத்துக்கு அவர் திரும்பியபொழுது அவருடைய குடும்பத்தினர் அவரை திரந்தரமாக ஏதாவதொரு வேலையை அத்துக்கொள்ளுமாறு கூறினார்கள். ஜாக் ஒரு சணல்ஆலையில் வேலை பார்க்கலானார். ஆனால் அந்த வேலை அவருக்குப் :பிடிக்கவில்லை. பிறகு ரயில்ளத்திர சாலையில் கரி தள்ளும் மற்றொரு வேலையும் அவருக்கு மிகுந்த வெறுப்பளித்தது.1894-ம் ஆண்டில் கெல்லி என்பருடைய கைத்தொழிற்படை தனது நீண்ட யாத்திரையைத் தொடங்கிற்று. சார்லஸ்கெல்லி என்பவரைத் தலைவராகக் கொண்டு வேலையில்லாத மக்கள் இவ்வாறு வாஷிங்டனை நோக்கிப் புறப்பட்டார்கள். சான்பிரான்சிஸ் கோவிலிருத்து அறுநூறு பேர் யாத்திரை தொடங்கினார்கள். அந்தப் படையில் சேருவதற்காக வந்த ஜாக் லண்டனுக்கு ஒக்லாந்தில் ரயில் தவறிவிட்டது. ஆனால் அவர் விடாப்பிடியாகத் துணிந்துசென்று ஒமஹா என்ற இடத்தில் அப்படையோடு சேர்ந்துகொண்டார். துயரம் நிறைந்த சம்பவங்களையெல்லாம் கற்பனை செய்து அவர் வழி முழுதும் கூறுவார். இளகிய நெஞ்சுள்ள மங்கையர் அவற்றைக் கேட்டு மிகுந்த பரிவு கொண்டு அவருக்கு வேண்டிய உணவு கொடுப்பார்கள். ஒமஹா வரையில் யாத்திரைப்படைக்கு மிகுந்த உற்சாகமும் வெற்றியும் இருந்தன, ஆனால் காக்ஸி என்ற தளகர்த்தருடைய முயற்சி வாஷிங்டனில் தோல்வி அடையவே இந்தப்படையின் கட்டுப்பாடு குலைய ஆரம்பித்தது. கட்டுப்பாட்டின் குலைவிற்கு ஜாக்கும் காரணமாய் இருந்தார். கெல்லியால் அந்தப் படையை ஒழுங்குக்குக் கொண்டுவர முடியவில்லை. ஜாக்கிற்கு அந்த இயக்கத்தின் மேலிருந்த பற்றுதல் முற்றிலும் போய்விட்டது. ஹனிபால் என்ற இடத்தில் அவர் அந்தப் படையைப் புறக்கணித்துவிட்டு மத்திய மேற்குக் கிழக்குப்பிரதேசங்களைச் சுற்றிப்பார்க்கச் சென்றார்.