பக்கம்:கானகத்தின் குரல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 15 அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆதலால் அவர் தத்துவ சாஸ்திரத்தில் ஆழ்ந்த புலமை எய்தவில்லை. நவீன இலக்கியத்தில் அவருக்குள்ள முக்கியமான ஸ்தானத்தை அவர்தத்துவ சாஸ்திரி என்ற முறையில் பெறவில்லை. அவர் பிறப்பிலேயே கற்பனை ஆர்வமுடையவர். ஆழ்ந்த தத்துவ சாஸ்திரியாகவோ விஞ்ஞானியாகவோ அவரைக் கருதுவது சரியல்ல. ஜாக் லண்டனுடைய நூல்களெல்லாம் மனோபாவனைக் கதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையிலேதான் அவற்றை மதிப்பிட வேண்டும். ஜாக் லண்டன் கதை சொல்லுவதில் மிக வல்லவர். இதுதான் அவரைப் பற்றி முக்கியமாகக் கூற வேண்டிய விஷயம். அவர் கதைகளைச் சிறந்த முறையில் சொல்வதற்காகவே பிறந்தவர். ‘ஸ்நார்க் கப்பலில் பிரயாணம் செய்தபொழுது இந்திய சமுத்திரத் தீவுகளுள் ஒன்றில் அவர் தங்க வேண்டி ஏற்பட்டிருந்தால் அங்கு கதைகள் சொல்லி அவர் மிகுந்த கீர்த்தி பெற்றிருப்பார். ஆதாம் பிறப்பிற்கு முன்னாலேயே அவர் பிறந்திருப்பாரானால் அப்பழங்காலத்தில் இருந்த சடைமனிதர்களுக்குத் துணிகரச் செயல்கள் மிகுந்த கதைகளைச் சொல்லி அவர்களை ஸ்தம்பிக்குமாறு செய்திருப்பார். கவனத்தை ஈர்க்கும்படியாகக் கதை சொல்லும் திறமையும், கதைப்போக்கில் தடை ஏற்படாமல், தெளிவாக வர்ணிக்கும் திறனும், நாடகபாணியில் நிகழ்சிகளை அமைக்கும் சக்தியும் சேர்ந்து ஜாக் லண்டனின் பெரும்பாலான நூல்களுக்குக் தனிப்பட்ட கவர்ச்சியை அளிக்கின்றன. அவருடைய நூல்களெல்லாம் ஒரே தரமாக இல்லை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். கடன்தொல்லையைத் தவிர்க்கவே பெரும்பாலான நூல்களை அவர் எழுதினார் என்று அவருடைய கடிதங்களிலிருந்து அறியலாம். சாதாரணமான நூல்கள் பலவற்றைத் தாம் எழுதுவதாக அவர் தம்முடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். அப்படியிருந்தாலும் அவர் எழுதியவற்றில் மிகப்பல நூல்கள் சிறந்தவையே. அவற்றில் ஒருசில என்றும் நிலைத்திருக்கும் மதிப்பு வாய்ந்தவை. . திறமை வாய்ந்த பெரும்பாலான கதையாசிரியர்கள் தங்கள் அனுபவங்களைக் கதைகள் பலவற்றில் புகுத்துவார்கள். தான் என்ற உணர்ச்சி மிக்க ஜாக் லண்டன் தனது நூல்கள் பலவற்றில் தமது வாழ்க்கைச் சரித்திரத்தையே கூறியுள்ளார். மார்ட்டின் ஈடன் என்ற நூலில் எழுத்தாளரான ஜாக் லண்டன் தோன்றுகிறார். அவருடைய நாடோடி வாழ்க்கை அனுபவங்கள் சாலை (The Road) என்ற நூலில்