பக்கம்:கானகத்தின் குரல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தின் குரல் கூறப்பட்டுள்ளன. அவருடைய மதுபான அனுபவங்கள் ஜாக் கான் என்ற நூலில் வெளியாகின்றன. இந்த நூல் மது தியையும் மது விற்பனையையும் அறவே விலக்கும்படி வற்புறுத்துகிறது. ஸ்நார்க் கப்பல் பிரயாணம் என்ற நூலில் ருடைய பிரயான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்காக எழுதிய நூல்களும், சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் அவருடைய வாழ்க்கைநிகழ்ச்சிகளையே விவரிக்கின்றன. அவருடைய பண்ணைஅனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றொரு நூல். அவருடைய கட்டுரைகளும் சொந்த அனுபவங்களையே கூறுகின்றன.

அவருடைய நாவல்களில் வரும் கதாநாயகர்களைத் தமது வாழ்க்கைஅனுபவத்தைக் கொண்டே சித்தரித்திருந்தாலும், அவர் வேறு சிறந்த பாத்திரங்களையும் சிருஷ்டி செய்திருக்கலாம். ஆனால் பக் என்ற நாயைத் தவிர வேறு சிறந்த கதாநாயகன் ஒருவனையும் அவர் உருவாக்கவில்லை. கதைக்கான நிலங்களையும் பின்னணிகளையும் ஜாக் லண்டன் அநேகமாக எப்பொழுதும் மிக நன்றாக அமைக்கிறார். சில சமயங்களில் அவை மிக அற்புதமாக அமைகின்றன. கதைப் போக்குக்குத் தடை ஏற்படாதவாறு இயல்பாகவே அமைந்திருப்பதால் அவை பெரிதும் பயனுடையதாக இருக்கின்றன. இந்த முறையில் தீ மூட்டுதல் (To build a fire) என்பது இணையற்றது. மிகச் சிறந்த அமெரிக்கச் சிறுகதைகளில் இது ஒன்றாகும். ஜாக் லண்டனுடைய கதைகளின் பொருளைப் பற்றியும், கருவைப் பற்றியும் முன்பே கூறப்பட்டுள்ளது. தத்துவசாஸ்திரத்தில் அவருக்கிருந்த ஆர்வம் அவருக்கு எண்ணற்ற கதைப்பொருள்களை அளித்தது; ஒரே பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதையும் அவர் வெறுக்கவில்லை. அவருடைய மிகப் பலவான வாழ்க்கை அனுபவங்கள் அவருக்குக் கதைக் கருத்துக்களை ஏராளமாகத் தந்தன. கதை சொல்லும் அவருடைய திறமையின் ஒரு பகுதியாக அமைந்திருந்த நாடகப் பாணி அவருடைய கதைகளுக்குத் தனிச் சிறப்பாக அமைந்தது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள கதை எவ்வாறு எழுந்தது என்பதைப் பற்றிச் சுருக்கமாக இப்பொழுது பார்க்கலாம். 1903-மார்ச் 11-ம் தேதியன்று அவர் தமது நட்புக்குரிய ஆனா ஸ்ட்ரன்ஸ்கி என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கானகத்தின் குரல் என்ற கதையைப் பற்றிக் கூறுகிறார். பட்டார்டு என்ற் எனது நாய்க்கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அதோடு தொடர்புள்ள கதையாக இதை எழுதத்