பக்கம்:கானகத்தின் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கானகத்தின் குரல் தனது சிநேகபாவத்துடன் கர்லி ஒரு முரட்டு எஸ்கிமோ நாயினருகே சென்றது. அந்த தாய் ஓர் ஓநாயின் அளவிருக்கும்; ஆனால், கர்லியின் பருமனில் பாதி கூட இல்லை. மின்னல்வேகத்தில் அது திடீரென்று கர்லியின் மேல் பாய்ந்தது. நற நறவென்று பல்லால் கடித்தது. மறுகணத்தில் அதே மின்னல்வேகத்தில் அது எட்டித் தாண்டி ஓடிவிட்டது. கர்லி இதை எதிர்பார்க்கவே இல்லை. தாக்குவதும், தாக்கியவுடன் தாவிக் குதித்தோடுவதுந்தான் ஒநாய்ச் சண்டை. அம்முறையை அந்த நாய் பின்பற்றியது. முப்பது நாற்பது எஸ்கிமோ நாய்கள் ஓடிவந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு நாய்களையும் சுற்றி வளைத்துக் கொண்டு மெளனமாக நின்றன. அவைகள் கூர்ந்து கவனிப்பதையும் ஆவலோடு நாவினால் கடைவாயை நக்கிக்கொள்வதையும் பக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிரியின் மேல் கர்லி பாய்ந்தது; ஆனால் அந்த எஸ்கிமோ நாய் மீண்டும் தாக்கிவிட்டுத் தாவியோடியது. அடுத்ததடவை கர்லி பாய வரும்போது அது தனது மார்பால் தந்திரமாகக் கர்வியைத் தடுத்துக் கீழே விழும்படிச் செய்தது. இதற்குத்தான் மற்ற நாய்கள் காத்திருந்தன. கர்லி கீழே விழுந்ததுதான் தாமதம், சுற்றி நின்ற எஸ்கிமோ நாய்க்ளெல்லாம் அதன் மேல் சிறிக்கொண்டும், குரைத்துக்கொண்டும் விழுந்து தாக்கின. துயரந்தாங்காமல் கர்லி வீறிட்டுக் கத்திற்று. எதிர்பாராத விதமாக எல்லாம் ஒரு கணத்தில் நடந்துவிட்டது. பக்குக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்பிட்ஸ்" சிரிப்பதுபோலத் தனது சிவந்த நாக்கை நீட்டிக்கொண்டு நின்றது. ஒரு கோடரியை ஓங்கி வீசிக்கொண்டு பிரான்சுவா அந்த நாய்க்கூட்டத்திற்கிடையே குதித்தான். அவனுக்கு உதவியாக மூன்று மனிதர்கள் வந்து அந்த நாய்களைத் தடியால் அடித்து விரட்டினார்கள். கர்லி கீழே விழுந்த இரண்டு நிமிஷங்களுக்குள்ளே அந்த எஸ்கிமோ நாய்களை ஒட்டிவிட்டார்கள். இருந்தாலும் அதற்குள்ளே கர்லி உயிரற்றுப் பினமாகிவிட்டது. அதன் உடம்பு தாறுமாறாகக் கிழிபட்டு ரத்தம் தோய்ந்த பனியிலே கிடந்தது. இந்தக் காட்சி அடிக்கடி பக்கின் தூக்கத்திலும் தோன்றித் தொல்லை கொடுத்தது. இதுவே இங்கு வாழ்க்கைமுறை. ஞாயம் என்பது கிடையாது. கீழே விழுந்தால் உயிருக்கே ஆபத்து. பக் இதைத் தெரிந்துகொண்டது; கீழே விழுவதில்லை என்றும் தீர்மானித்துக்கொண்டது. ஸ்பிட்ஸ் நாக்கை நீட்டி மறுபடியும் சிரித்தது. அது முதல் பக் அதனிடத்தில் மாறாத வெறுப்புகொண்டது. -

  • ஸ்பிட்ஸ்பர்கன் நாய்