பக்கம்:கானகத்தின் குரல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கனகத்தின் குரல் பில்லை. வாலைக்குழைத்தது. அது பயன்படாமற்போகவே ஒட்டம் பிடித்தது. ஸ்பிட்ஸின் கூர்மையான பற்கள் விலாப்புறம் பதியவே கத்தத் தொடங்கியது. ஆனால் ஸ்பிட்ஸின் திறமை ஜோவிடத்தில் பலிக்கவில்லை. அது எத்தனையோ தடவை சோவைச் சுற்றிவந்தது. அப்படி வந்தபோதிலும், ஜோ அதையே ஏறிட்டுப் பார்ப்பதற்கு வசதியாகத் தன் உடம்பை மட்டும் திருப்பிக்கொண்டு ஒரே இடத்திலிருந்தது. அதன் பிடரிமயிர் சிலிர்த்தது. காதுகள் பின்புறமாக மடிந்தன. உதடுகள் நெளிந்தன. பல தடவை வாயைக் கடித்துக்கொண்டு சீறிற்று. பல்லைக் காட்டி உறுமிற்று. பயமே உருவமாக அது தோன்றியது. அதன் தோற்றம் மிகப் பயங்கரமாக இருந்ததால் அதைத் தனக்குப் பணிய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பிட்ஸ் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் தனது தோல்வியை மறைப்பதற்காக பில்லியின் மேல் மறுபடியும் பாய்ந்து அதை முகாமின் எல்லைக்கே துரத்திவிட்டது. மாலை நேரத்திற்குள் பெரோல்ட் மற்றொரு நாயையும் வாங்கிவந்தான். அது வயதான எஸ்கிமோ நாய், ஒல்லியான நீண்ட உடலும், சண்டை தழும்பேறிய முகமும் உடையது. அதற்கு ஒரு கண்தான் தெரியும். அந்தக் கண்ணிலே அதன் வல்லமை ஒளிவிட்டது. அதைப் பார்த்தாலே மற்ற நாய்கள் பயப்படும். அந்த நாயின் பெயர் சோலெக்ஸ். சோலெக்ஸ் என்றால் கோபக்காரன் என்று பொருள். டேவைப் போல் அந்த நாயும் எதையும் எதிர்பார்க்கவில்லை. அது மெதுவாக நாய்களின் மத்தியிலே நடைபோட்டுக்கொண்டு வந்தபொழுது ஸ்பிட்ஸ் கூட மெளனமாக இருந்துவிட்டது. கண்பார்வை இல்லாத பக்கமாக வந்தால் சோலெக்ஸுக்குப் பிடிக்காது. அதைத் தெரிந்துகொள்ளாமல் பக் ஒரு தடவை அந்தப் பக்கமாகச் சென்றுவிட்டது. சோலெக்ஸ் சட்டென்று திரும்பி அதன்மேல் பாய்ந்து அதன் முன் கால் சப்பையில் மூன்றங்குல நீளத்திற்குக் கடித்து வகிர்ந்துவிட்டது. அது முதல் அதன் குருட்டுக்கண் பக்கமாகப் பக் செல்லுவதே இல்லை. எனவே மீண்டும் சோலெக்ஸால் அதற்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படவில்லை. டேவைப்போல் அதுவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் தனியாக விட்டுவிடவேண்டும் என்று தான் ஆசை கொண்டிருப்பதாக முதலில் தோன்றியது; ஆனால் அந்த இரண்டு நாய்களுக்கும் மற்றொரு முக்கியமான ஆசை இருந்ததென்பதைப் பக் பிற்காலத்தில்தான் அறியலாயிற்று. அன்றிரவு பக்கிற்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டாயிற்று. எங்கே உறங்குவது? வெள்ளைப்பணி மூடிய அந்த நிலப்பரப்பிலே கூடாரம்