பக்கம்:கானகத்தின் குரல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 35 போடப்பட்டிருந்தது. அதற்குள்ளிருந்து மெழுகுவர்த்தியின் ஒளி தோன்றியது. ஆனால் பக் கூடாரத்திற்குள்ளே நுழைந்தபோது பெரோல்ட்டும், பிரான்சுவாவும் அதை அதட்டினார்கள். சமையல் வேலைக்கான சில கருவிகளை எடுத்து அதன் மேல் வீசினார்கள். அது பயந்து வெளியே கடுங்குளிருக்குள்ளே ஒட்டமெடுத்தது. குளிர்ந்த காற்று வீசிற்று. பக்கால்அதைத் தாங்க முடியவில்லை. அதன் முன்னங்காலில் ஏற்பட்டிருந்த காயத்தில் குளிர்க்காற்று பட்டுப் பொறுக்க முடியாத வலி எடுத்தது. பனியின் மேல் படுத்து பக்துங்க முயன்றது. ஆனால் உறைபனி விழுந்து அதை நடுக்கிற்று. கீழே படுக்கவே முடியவில்லை. ஆறாத் துயரத்தோடு அது கூடாரங்களினிடையே சுற்றிச் சுற்றித்திரிந்தது. எந்த இடத்திலும் ஒரே கடுங்குளிர்தான். அங்குமிங்கும் காட்டுநாய்கள் திரிந்தன. அவைகள் பக்கின் மேல் பாயவந்தபோது பக்கினது பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டு சீறிற்று. அப்படி செய்துதான் அவைகளிடமிருந்து தப்ப முடியும் என்று பக் தெரிந்து கொண்டிருந்தது. அந்த உபாயமும் நல்ல பயனளித்தது. கடைசியில் பக்குக்கு ஒர் எண்ணம் தோன்றியது. தன்னுடன் இருந்த மற்ற நாய்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாமென்று திரும்பி வந்தது. ஆனால் அவைகளில் ஒரு நாயைக் கூடக் காணமுடியவில்லை. எல்லாம் எங்கேயோ மறைந்துவிட்டன. கூடாரம் முழுவதும் அவைகளைத் தேடி பக் அலைந்தது. அவைகள் கூடாரத்திற்குள் இருக்கின்றனவா? இருக்க முடியாது. அவை அங்கிருந்தால் பக்கை மட்டும் வெளியில் துரத்தியிருக்க மாட்டார்கள். பிறகு அவை எங்கே இருக்கமுடியும் வாலை மடித்துக்கொண்டு நடுக்கும் குளிரிலே கூடாரத்தைச் சுற்றிச்சுற்றி ஒரு நோக்கமும் இல்லாமல் பக் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஓரிடத்திலே அது தன் முன்னங்கால்களை வைத்தபோது திடீரென்று கால்கள் தரையில் புதைந்தன. அங்கே பனி இளகியிருந்தது. அதன் கால்களுக்கடியில் ஏதோ ஒரு பிராணி நெளியலாயிற்று. அதைக் கண்டு பயந்து பக் சிலிர்த்துக்கொண்டும் சீறிக்கொண்டும் பின்னால் தாவியது. ஆனால் தரைக்குள்ளிருந்து சினேகபாவத்துடன் ஒரு நாயின் குரல் கேட்கவே அது திரும்பிச் சென்று பார்த்தது. பந்துபோல சுருண்டு அந்தப் பனிக்கடியிலே பில்லி படுத்திருந்தது. பில்லி தனது அன்பைப் பல வகைகளிலே பக்குக்குக் காட்ட முயன்றது. மற்றொரு படிப்பினை, பனியிலே படுத்துறங்க அதுதான் வழியா? பக் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து எப்படியோ ஒரு குழி தோண்டிக் கொண்டு அதில் படுத்தது. கொஞ்ச நேரத்தில் அதன் உடம்பில் உள்ள உஷ்ணமே அந்தக் குழி முழுவதும் பரவிவிட்டது. பக் உறக்கத்தில்