பக்கம்:கானகத்தின் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜக் லண்டன் 37 பக்குக்கு மகிழ்ச்சிதான். வண்டி இழுப்பது கடினமாக இருந்தாலும் அதை அவ்வளவாக வெறுக்கவில்லை. அந்தக் கோஷ்டியிலிருந்த நாய்களிடையே உற்சாகமும் ஆவலும் காணப்பட்டன; பக்குக்கும் அவை தாமாகவே ஏற்பட்டன. டேவ், லோலெக்ஸ் இரண்டும் இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டதைக் கண்டு பக் ஆச்சரியமுற்றது. சேனமணிந்தவுடன் அவை புதுநாய்களாக ஆகிவிட்டன. யாதொரு தொந்தரவுமில்லாமலும், எதையும் கவனிக்காமலும் தனியாகக் கிடக்க வேண்டுமென்ற அவற்றின் விருப்பமெல்லாம் மறைந்துவிட்டது. அவைகளுக்குச் சுறுசுறுப்பும் வேலையில் ஆர்வமும் வந்துவிட்டன. வண்டி இழுப்பதிலே ஏதாவது இடைஞ்சலோ, தாமதமோ ஏற்பட்டால் அவை சினமடையும். உறை பனிப்பாதையிலே சறுக்குவண்டி இழுத்துச்செல்வதுதான் அவற்றின் வாழ்க்கையின் நோக்கம் போலவும், அந்தப் பணியிலேதான் அவற்றிற்கு இன்பம் போலவும் தோன்றின. சறுக்குவண்டியில் பூட்டியிருந்த வரிசையில் டேவ்தான் எல்லா நாய்களுக்கும் பின்னால் இருந்தது; அதற்கு முன்னால் பக். அதற்கு முன்னால் ஸோலெக்ஸ்: எல்லாவற்றிற்கும் முன்னால் தலைமை ஸ்தானத்தில் ஸ்பிட்ஸ். பக்கைப் பழக்குவதற்காகவே டேவுக்கும் லோலெக்ஸ்-க்கும் மத்தியில் அதைப் பூட்டினார்கள். பக் நல்ல மாணவன்.டேவும், ஸோலெக்ஸ்-ம் கற்றுக்கொடுப்பதில் தேர்ந்தவை. பக் தவறு செய்யும்போதெல்லாம் தமது கூரிய பற்களால் கண்டித்து அவை அதைப் பழக்கின. டேவ் நியாயமுள்ளது; நல்ல அறிவும் வாய்ந்தது. காரணமில்லாமல் அது தண்டிக்காது; அவசியமான இடத்தில் தண்டிக்காமலும் விடாது. டேவிற்குப் பக்கபலமாகப் பிரான்சுவாவின் சாட்டையும் அதன் வேலையைச் செய்தது. ஆதலால் எதிர்த்துப் போராடுவதைவிடத் தன்னைத் திருத்திக் கொள்வதே நல்லது என்று பக் கண்டுகொண்டது. ஒரு தடவை ஓரிடத்திலே சறுக்குவண்டி கொஞ்ச நேரம் தயங்கியபோது வண்டியை இழுக்கப் பயன்படும் அள்ளைவார்களான திராஸ் வார்களில் பக் சிக்கலாக மாட்டிக்கொண்டது. அதனால் புறப்படுவதற்குத் தாமதமாயிற்று. டேவும், ஸோலெக்ஸ்-ம் பக்கின் மேல் பாய்ந்து நல்ல தண்டனை வழங்கின. அதனால் இன்னும் சிக்கல் அதிகமாயிற்று. ஆனால் அது முதல் திராஸ் வார்களை ஒழுங்காக வைக்கப் பக் கற்றுக்கொண்டது. அந்த நாள் முடிவதற்குள் பக் தனது பணியை மிக நன்றாகப் பழகிக் கொண்டதால் தண்டனைக்குரிய சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. பிரான்சுவாவின் சாட்டைவீச்சும் ஒயலாயிற்று. அன்றைய வேலை