பக்கம்:கானகத்தின் குரல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காணகத்தின் குரல் முடிந்தவுடன் பெரோல்ட் பக்கின் கால்களைத் தூக்கிக் காயமேற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்தான். நன்றாக வேலை செய்யும் நாய்க்குத்தான் இந்த மரியாதை கிடைக்கும். நாள் முழுவதும் கடினமான ஒட்டம். உறைந்த ஆறுகளைத் தாண்டியும், காற்றால் உண்டாக்கப்பட்ட பனிக்கட்டித்திடர்களுக்கு இடையிலுமாகச் செல்லவேண்டியிருந்தது. அவிந்துபோன எரிமலைகளின் வாய்களில் சங்கிலித்தொடர்போல் ஏற்பட்டிருந்த பல ஏரிகளைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. இரவாகிப் பல மணி நேரத்திற்குப் பிறகு பென்னட் ஏரியின் அருகிலே ஒரு பெரிய கூடாரம் அமைத்தார்கள். ஆயிரக்கணக்கான தங்கவேட்டைக்காரர்கள் அந்த இடத்தில் வசந்தகாலத்தை எதிர்பார்த்துப் படகுகள் கட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேலை செய்து களைத்துப்போயிருந்த பக் பணியிலே ஒரு வளை தோண்டிக் கொண்டு படுத்து நிம்மதியாக உறங்கிற்று. ஆனால் அதிகாலையிலேயே இருட்டு பிரியாத முன்பே நாய்களை அதட்டி எழுப்பி அவற்றிற்கு மீண்டும் சேணம் போட்டார்கள். பாதை நன்றாக இருந்ததால் அன்று நாற்பது மைல் போக முடிந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாளும், அதைத் தொடர்ந்து பல நாட்களும் அவ்வாறு போகமுடியவில்லை. பனிக்கட்டியிலே புதிதாகப் பாதை அமைத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது. அதனால் வண்டி இழுப்பதும் சிரமமாயிற்று. சாதாரணமாக தாய்களுக்கு முன்னால் சென்று அவை சுலபமாகச் செல்லுவதற்குத் தகுந்தவாறு பெரோல்ட் பனியை ஒழுங்குபடுத்துவான். பிரான்சுவா சறுக்குவண்டியிலமர்ந்து அதைச் செலுத்துவான். எப்பொழுதாவது ஒரு சில சமயங்களில் அவர்கள் தங்கள் வேலையை மாற்றிக் கொள்வார்கள். விரைந்து செல்ல வேண்டுமென்று பெரோல்ட் அவசரப்பட்டான். பனிக்கட்டியைப் பற்றி தனக்குள்ள அறிவைக் குறித்து அவன் பெருமை கொள்வதுண்டு. இது போன்ற பிராயணத்திற்கு அந்த அறிவு மிக அவசியம். அந்தச் சமயத்தில் லேசாகத்தான் பணிக்கட்டி விழுந்திருந்தது. வேகமாகத் தண்ணீர் ஒடிக்கொண்டிருக்குமிடத்தில் பணிக்கட்டியே இல்லை. முடிவில்லாமல் பல நாட்கள் பக் உழைத்தது. நன்கு இருட்டிய பிறகேதான் முகாம் போட்டுத் தங்குவார்கள். விடியும் அறிகுறிகள் தென்படும்போதே மறுபடியும் வேலை தொடங்கிவிடும். இருட்டிலே கூடாரமடித்த பின்பு நாய்களுக்கு மீன்துண்டுகள் உணவாகக் கிடைக்கும். அவற்றைத் தின்றுவிட்டு அவை பனியிலே வளை தோண்டிப் படுத்துறங்கும். பக்கிற்கு அடக்க முடியாத பசி.