பக்கம்:கானகத்தின் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 39 சூரியவெப்பத்தில் உலர்த்திய ஒன்றரை ராத்தல் மீன் அதற்குத் தினமும் உணவாகக் கிடைத்தது. வயிற்றுக்குள்ளே அது மாயமாக மறைந்துவிடும். போதுமான உணவு கிடைக்காததால் அது சதா பசியால் வாடியது. மற்ற நாய்களில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ராத்தல் மீன்தான் கிடைத்தது. இருந்தாலும் அந்த தாய்களின் பருமனும் எடையும் குறைவாகையாலும், அந்த மாதிரி வாழ்க்கைக்காகவே அவை பிறந்தவையாகையாலும் அந்த உணவைக் கொண்டே அவை இளைக்காமல் நல்ல நிலையில் இருந்தன. நாகரிகமாகச் சுவைதேர்ந்து சாப்பிடும் பழைய வழக்கத்தை பக் விரைவில் இழந்துவிட்டது. அது மெதுவாக உணவைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது மற்ற நாய்களெல்லாம் விரைவிலே தங்கள் பங்கை முடித்துவிட்டு அதன் பங்கிலே திருடத் தொடங்கின. இதைத் தடுக்க முடியவில்லை. ஏதாவது இரண்டு மூன்று நாய்களோடு சண்டையிட்டுத் துரத்துவதற்குள் மற்ற நாய்கள் அதன் உணவைக் கொள்ளையிட்டுவிடும். அதனால் பக்கும் மற்ற நாய்களைப் போல் வேகமாகச் சாப்பிடலாயிற்று. பசியின் துண்டுதலால் அதுவும் தனக்குச் சொந்தமில்லாத உணவைத் திருடவும் தயங்கவில்லை. அது மற்ற நாய்களைக் கவனித்துப் பார்த்துப் பழகிக்கொண்டது. புதிய நாய்களில் ஒன்றான பைக் திருடுவதில் சாமர்த்தியமுள்ளது. பெரோல்ட் ஏமாந்திருக்கும் சமயம் பார்த்து அது ஒரு துண்டு பன்றிஇறைச்சியைத் தந்திரமாகத் திருடிக்கொண்டதைப் பக் பார்த்தது. அந்த நாயின் வழியைப் பின்பற்றி அடுத்த நாள் பக் ஒரு பெரிய துண்டையே திருடிவிட்டது. அதைக்குறித்து முகாமில் ஒரே அமர்க்களம் ஏற்பட்டது. ஆனால் யாரும் பக்கைச் சந்தேகிக்கவில்லை. டப் என்ற பெயருடைய நாய் தடுமாற்றத்தால் ஏதாவது தவறு செய்து அகப்பட்டுக்கொள்ளும் பக் திருடியதற்காக டப் அன்று தண்டனை பெற்றது. குளிர் மிகுந்த அந்த வடக்குப் பனிப் பிரதேசத்திலே பிழைப்பதற்குப் பக் தகுதி உடையதுதான் என்பது அதன் முதல் திருட்டிலேயே வெளியாயிற்று. மாறுகின்ற நிலைமைக்குத்தக்கவாறு அனுசரித்து நடந்துகொள்ள அதற்குத் திறமையிருந்தது. அந்தத் திறமையில்லா விட்டால் விரைவிலே சாவு நிச்சயம். ஆனால் அதன் நல்லொழுக்கம் சிதறுண்டது. அந்தக் கொடிய வாழ்க்கைப் போராட்டத்திலே நல்லொழுக்கமே ஒரு குறைபாடாகத் தோன்றியது. பிறருடைய உடைமையை அபகரிக்கக்கூடாது என்பதும், பிறருடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதும் அன்பும் தோழமையும் ஆட்சி செய்யும் தெற்குப்பிரதேசத்திலே சரிப்படும்; ஆனால் கோரைப்பல்லும் குறுந்தடியும் ஆட்சி செலுத்தும் வடக்குப்