பக்கம்:கானகத்தின் குரல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காணகத்தில் சூால் பனிப் பிரதேசத்திலே அவற்றைக் கருதுபவன் முட்டாளாக வேண்டும்; அவன் முன்னேறி வாழ முடியாது. பக் இவற்றையெல்லாம் சிந்தித்து முடிவு செய்யவில்லை. தன்னை அறியாமலேயே அது புதுமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு தன்னைத் தகுதியாக்கிக்கொண்டது. வாழ்க்கையிலே அது முன்பெல்லாம் சண்டைக்குப் பயந்து ஓடியதில்லை. ஆனால் சிவப்பு மேலங்கிக்காரனுடைய அடி அதற்குப் புதியதொரு தருமத்தைக் கற்றுத்தந்தது. நாகரிக வாழ்க்கையிலே அது ஞாயத்திற்காகப் போராடி உயிர் விடவும் தயாராக இருக்கும். ஆனால் இப்பொழுது தனக்கேற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்காக அது ஞாயத்தைக் கவனிக்காமல் ஒடத் தயாராக இருந்தது. திருடுவதிலே அதற்கு மகிழ்ச்சியில்லை; ஆனால் அதன் வயிறு காய்ந்தது. வயிற்றின் கொடுமையைத் தாங்க முடியவில்லை. குறுந்தடிக்கும் கோசைப்பல்லுக்கும் அஞ்சி அது வெளிப்படையாகத் திருடாமல், தந்திரமாகவும் ரகசியமாகவும் திருடிற்று. இந்தக் காரியங்களை யெல்லாம் செய்து அங்கு வாழ்வது சுலபம். செய்யாமல் வாழ்வதுதான் கடினம். அதனாலேயே பக் அவற்றில் ஈடுபட்டது. இப்படியாக பக்கின் முன்னேற்றம் (அல்லது பிற்போக்கு) வேகமாக நடைபெற்றது. அதன் தசைநார்கள் எஃகு போல வலுவடைந்துவிட்டன. சாதாரணமான வலியெல்லாம் அதற்குத் தோன்றாதவாறு அதன் உடம்பு மரத்துப்போய்விட்டது. எதிலும் சிக்கனமாக இருக்க அது தெரிந்துகொண்டது. ஏதாவது ஒரு பண்டம் எத்தனை அருவருக்கத்தக்கதாக இருந்தாலும், ஜீரணிக்க முடியாததாக இருந்தாலும் அது தின்னத் தயங்கவில்லை. அப்படித் தின்றவுடன் அதன் வயிற்றில் சுரக்கும் ஜீரணcர்கள் எப்படியோ அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஒருசிறு உணவுச் சத்தையும் விடாமற் கவரலாயின. அந்தச் சத்தை உடம்பின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம்கொண்டு சென்றது; உறுதிமிக்க திசுக்கள் உடம்பிலே உருவாயின. பார்வையும் மோப்பம் பிடிக்கும் திறனும் மிகக் கூர்மையாகி விட்டன. உறக்க நிலையிலேகூட மிகச் சிறிய சத்தமும் அதற்குக் கேட்கும்படி செவிப்புலனும் அவ்வளவு நுட்பமாகிவிட்டது. சத்தத்தைக் கேட்கும்பொழுதே அதனால் தீங்கு ஏற்படுமா அல்லது நன்மை விளையுமா என்று கூடக் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டது. கால்விரல்களுக்கிடையிலே பனிக்கட்டி கோர்த்துக் கொள்ளும்போது வாயால் அதைக் கடித்துத் தள்ளவும் அது கற்றுக்கொண்டது. தாகமெடுத்தால் நீர்நிலைக்கு மேலே மூடியுள்ள பனிக்கட்டியைத் தனது முன்னங்கால்களால் இடித்துத் தள்ளிவிட்டுத் தண்ணிர் குடிக்கவும் அது பழகிக்கொண்டது. காற்றை மோப்பம் பிடித்து ஓர்