பக்கம்:கானகத்தின் குரல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பிறமெ ாழிப்படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற புதுமைப்பித்தன் பதிப்பகத்தின் நோக்கமே. ஜாக் லண்டனின் கானகத்தின் குரல் என்ற இந்த நாவல். இந்நூல் 1958-லேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. எனினும், இன்றைய காலகட்டத்திலும், பதிப்பிக்கத் தகுதியும், தேவையும் உடையதாக இருப்பதால் இந்நாவலை மறுபதிப்பு செய்துள்ளோம். மிகச்சிறந்த எழுத்தாளர் பலரைப் போலவே தனது நாற்பது வயதிலேயே மரணத்தைத் தழுவியவர் ஜாக் லண்டன். இவரது படைப்புகள் அமெரிக்கா மட்டு மின்றி ஐரோப்பிய நாடுகளிலும் மிகுந்த புகழ்பெற்றிருந்தன. ரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர். 'கானகத்தின் குரல் என்ற இந்த நாவல் 'பக்" என்ற தாயின் கதையைப் பற்றிப் பேசுகிறது. இன்றையச் சூழலில் வாசிக்கும் வேளை இது நாயின் கதை மட்டும்தானா என்ற சம்சயத்தை ஏற்படுத்துகிறது. தன் ஆதிகுணத்தை மறந்து அமைதியாக வாழும் ஜீவன், இடையில் மிகுந்த தொல்லைகளுக்கும், கொடூரமான அடக்கு முறைகளுக்கும் ஆட்படும்போது, ஜீவ மரணப்போராட்டத்தில் நாளைய வாழ்வு நிச்சயமில்லை என்ற நிலை முன்னிற்கும்போது, அந்த ஜீவன் தவிர்க்க இயலாமல் மீண்டும் தன் ஆதிகுணத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வகையில் இந்நாவல் இன்றைய தமிழினச் சூழலில் ஒரு குறியீட்டு நாவல் போலவே தோன்றுகிறது. ஆதிகுணம் என்ற இழை எப்போதும் அறுபட்டுப்போவதில்லை போல காலுக்கடியில் உணரமுடியும் சரஸ்வதி நதி போல. அது சூட்சுமமாக நம்முள் ஒடிக்கொண்டேதான் இருக்கிறது. எழுத்தையே தொழிலாகக் கொண்டதால் ஏராளமாய் எழுதிக்குவிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஜாக் லண்டனின் தலைசிறந்த படைப்பு இந்தக் கானகத்தின் குரல். இந்நாவலை மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கும் அமரர் பெ. துரன் அவர்களின் பங்களிப்பு எந்நாளும் நிலைத்திருக்கும். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதுண்டோ - சந்தியா நடராஜன்