பக்கம்:கானகத்தின் குரல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 , கனகத்தின் குரல் மாறாமல் இருந்தது. பிரான்சுவாவும், பெரோல்ட்டும் வண்டியை ஒட்டுவதும், வண்டிக்கு முன்னால் ஒடுவதுமாக மாறி மாறி வேலை செய்தார்கள். அடிக்கடி நிற்காமல் வண்டி ஒடிக்கொண்டிருந்தது. முப்பதுமைல் ஆறு என்ற ஆற்றிற்கு வந்து சேர்ந்தார்கள். அதன்மேல் பனிக்கட்டி நன்கு படிந்திருந்தது. அதனால் ஒரே நாளில் அதைக் கடந்து விட்டார்கள். வரும்போது அதைக் கடப்பதற்குப் பத்து நாட்கள் பிடித்தன. ல பார்ஜ் ஏரியிலிருந்து ஒரேயடியாக அறுபது மைல் செல்ல முடிந்தது. பல ஏரிகளின் வழியாக அவர்கள் மிக வேகமாகச் சென்றதால் வண்டிக்கு முன்னால் ஒடுகின்ற முறை யாருக்கு வந்தாலும் அவனுடைய சிரமம் அதிகரித்தது. அதனால் அவன் வண்டியின் பின்னால் தன்னைக் கயிற்றால் பிணைத்துக் கொண்டு நாய்களே தன்னையும் இழுத்துச் செல்லுமாறு செய்து கொண்டான். இரண்டாம் வாரத்தின் கடைசி நாள் இரவிலே அவர்கள் கடற்கரைப்பட்டினமான ஸ்காக்வே வந்து சேர்ந்தார்கள். இதுவரையிலும் யாரும் அவ்வளவு வேகமாக வந்ததில்லை. நாளொன்றுக்குச் சராசரி நாற்பது மைல் வீதம் அவர்கள் பதினான்கு நாட்கள் பிரயாணம் செய்திருக்கிறார்கள். பெரோல்ட்டும் பிரான்சுவாவும் ஸ்காக்வேயின் முக்கிய வீதிகளில் மூன்று நாட்கள் வரை தலைமிர்ந்து பெருமையோடு உலாவினார்கள். பல பேர் அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர்களுடைய நாய்களைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் நின்று அவற்றைப் புகழ்ந்தது. இந்த நிலையிலே அரசாங்கத்திலிருந்து புதிய உத்தரவுகள் வந்தன. பிரான்சுவாவும் பெரோல்ட்டும் அந்த வேலையிலிருந்து மாற்றப்பட்டார்கள். பிரிவதற்கு முன்பு பிரான்சுவா பக்கைத் தன்னருகே அழைத்தான். அதைக் கைகளால் அணைத்துக்கொண்டு கண்ணிர் வடித்தான். அதன் பிறகு பிரான்சுவாவையும் பெரோல்ட்டையும் பக் பார்க்கவில்லை. மற்ற மனிதர் தொடர்பைப் போலவே அவர்களுடைய தொடர்பும் அதனுடைய வாழ்க்கையிலிருந்து நீங்கிவிட்டது. ஸ்காச்சு மக்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் இப்பொழுது பொறுப்பேற்றான். பத்து பன்னிரண்டு சறுக்குவண்டிகள் டாஸனுக்குப் புறப்பட்டன. அவற்றோடு இந்த வண்டியும் சேர்ந்துகொண்டது.

  • யூக்கான் பிரதேசத்தில் ஒரு நகரம். கிளாண்டைக் தங்க வேட்டைக் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது