பக்கம்:கானகத்தின் குரல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 65 இந்தத் தடவை பிரயாணம் அவ்வளவு எளிதல்ல. வேகமாகவும் போக முடியாது. வண்டியில் பாரம் அதிகம். தபால்மூட்டைகள் மிகுதியாக இருந்தன. வடதுருவத்தின் அருகிலே தங்கம் தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கடிதங்களைக்கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. பக்குக்கு அந்த வேலையில் ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் டேவையும் சோலெக்ஸையும் போல் வண்டியை வேகமாக இழுப்பதிலே அது ஒரு தனிப்பெருமை அடைந்தது. மற்ற நாய்களும் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்யுமாறு التي لإيبي கவனித்துக்கொண்டது. ஒரே மாதிரியான வேலையை எந்திரம்போல் செய்யவேண்டும். ஒருநாள் போலவே எல்லா நாட்களும் சரியாக இருக்கும். அதிகாலையிலேயே குறிப்பிட்ட நேரத்தில் சமையல்காரர்கள் தீ மூட்டுவார்கள்; காலைஉணவு நடக்கும். பிறகு சிலர் கூடாரங்களைக் களைவார்கள்; சிலர் நாய்களுக்குச் சேனமிடுவார்கள். பொழுது நன்கு விடியுமுன்பே பிரயாணம் தொடங்கிவிடும். இரவிலே மீண்டும் முகாம்போட வேண்டும். சிலர் முளையடிப்பார்கள். சிலர் விறகு வெட்டுவார்கள். சிலர் படுக்கைக்காகப் பைன் மரத்தின் சிறு கிளைகளை வெட்டி வருவார்கள். மற்றும் சிலர் சமையலுக்கு வேண்டிய தண்ணிர் கொண்டுவருவார்கள். தண்ணீர் உறைந்துகிடந்தால் பனிக்கட்டிகளை எடுத்து வருவார்கள். நாய்களுக்கு உணவு கொடுப்பார்கள். இது ஒன்றுதான் அவைகளுக்குக் கொஞ்சம் இன்பமளிக்கும் நிகழ்ச்சியாகும். இதுவும் மீனைத் தின்ற பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு நாய்களெல்லாம் சேர்ந்து சுற்றித்திரியும். அந்தப் பிரயாணக்கூட்டத்திலே நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களிருந்தன. அவற்றில் சில சண்டைக்குப் பேர் போனவை. ஆனால் மூன்று வெவ்வேறு சண்டைகளிலே பக் எல்லா முரட்டு நாய்களையும் அடக்கிவிட்டது. அதனால் அது பல்லைக் காட்டி உரோமத்தைச் சிலிர்க்கும்போது மற்ற நாய்கள் பணிந்து ஓடலாயின. தீயின் அருகிலே முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக் கொள்வதில் பக்குக்கு மிகுந்த விருப்பம். தலையை நிமிர்த்திக்கொண்டு அது படுத்திருக்கும். தீக்கொழுந்துகளைப் பார்த்தவாறே ஏதாவது நினைத்துக்கொண்டிருக்கும். கதிரவ்னின் ஒளி கொஞ்சும் சான்டாகிளாராவில் உள்ள நீதிபதி மில்லரின் பெரிய மாளிகையைப் பற்றிச் சிலவேளைகளில் அது நினைக்கும்.