பக்கம்:கானகத்தின் குரல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கானகத்தின் குரல் சிமென்டால் கட்டிய நீச்சல் குளமும் மெக்சிக்கோ நாட்டு நாயான இசபெலும், ஜப்பான் நாட்டு டுட்ஸும் அதன் நினைவுக்கு வரும். ஆனால் சிவப்பு மேலங்கிக்காரனைத்தான் அது அடிக்கடி நினைத்துக்கொள்ளும். கர்லி இறந்த சம்பவமும், ஸ்பிட்ஸுடன் நடந்த பெரும் போரும் மனத்திலே தோன்றும். முன்பு உண்ட சுவையான உணவுகளின் நினைப்பும் உண்ண வேண்டுமென்று தனக்கு விருப்பமாகவுள்ள உணவுகளின் நினைப்பும் மேலெழும். மில்லரின் மாளிகைக்குத் திரும்பிப்போக அதற்கு ஆசையில்லை. வெப்பமான தென்பிரதேசம் எங்கோ இருக்கிறது. அதைப் பற்றிய ஞாபகம் அதைக் கவரவில்லை. பாரம்பரியமாக வந்த மிகப் பழமை நினைவுகள்தான் மிகுந்த சக்தியோடெழுந்தன. வாழ்க்கையிலே கண்டறியாத விஷயங்களையும் இந்தப் பழைய நினைவுகள் அதற்குப் பழக்கமானவைபோல் ஆக்கிவிட்டன. அதன் முன்னோர்களின் வாழ்க்கைஅனுபவங்களும், பழக்கங்களும், நினைவுகளும் அதன் இயல்பூக்களாக அமைந்திருந்தனவல்லவா? மனத்திலே மறைந்திருந்த அவைகளெல்லாம் புத்துயிர் பெற்று மேலெழுந்தன. சில வேளைகளில் சுடர்விட்டு எரியும் தீக்கு முன்னால் படுத்துக் கொண்டு ஏதோ கனவுலகத்தில் இருப்பதுபோல அது தோன்றும். அந்தச் சமயத்தில் அந்தத் தீக்கொழுந்துகள் ஏதோ பழைய காலத்தில் மூட்டிய தீயிலிருந்து எழுவதுபோல் அதற்குத் தோன்றும். முன்னால் அமர்ந்திருக்கும் சமையல்காரனும் வேறொரு மனிதனாக அதன் கண்களில் காட்சியளிப்பான். அந்த மனிதனுடைய கால்கள் குட்டையாயிருந்தன. கைகள் நீண்டிருந்தன. தசைநார்கள் ஒழுங்காயிராமல் முடிச்சு முடிச்சாக இருந்தன. அந்த மனிதனின் தலைமயிர் நீளமாகவும் சடை விழுந்தும் இருந்தது. மேலே போகப் போக நெற்றி பின்னால் சாய்ந்திருந்தது. அவன் விநோதமாகப் பல குரல்களை எழுப்பினான். இருட்டைக் கண்டு அவன் மிகவும் பயமடைந்தான். ஒரு கழியின் நுனியிலே பெரிய கல்லைக் கட்டி அதைக் கையில் வைத்துக்கொண்டு அவன் இருட்டுக்குள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அநேகமாக நிருவாணமாகவே இருந்தான். தீயால் பல இடங்களில் பொசுக்கப்பட்ட ஒரு கந்தையான தோல் அவன் முதுகிலே ஒரு பகுதியை மறைத்துக் கொண்டிருந்தது. அவன் உடம்பிலே உரோமம் செறிந்திருந்தது. நெஞ்சின் மீதும், தோள்களின் மீதும், கைகளின் வெளிப்பகுதிகளிலும், துடைகளின் பின்புறத்திலும் உரோமம் நீண்டுவளர்ந்து சடையாக இருந்தது. அவனால் நேராக நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இடுப்புக்கு மேல் உடம்பு முன்னால் சாய்ந்திருந்தது. முழங்கால்களுக்குப் பக்கத்தில்