பக்கம்:கானகத்தின் குரல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கானகத்தின் குரல் தாய்களும் அதிக சிரமப்பட்டு வண்டியை இழுக்க வேண்டும். இருந்தாலும் வண்டி ஒட்டுபவர்கள் நாய்களுக்குக் கூடுமான வரை உதவி செய்தார்கள். ஒவ்வோர் இரவிலும் முதலில் நாய்களைத்தான் கவனித்தார்கள். அவைகளுக்கு முதலில் உணவு கொடுத்தார்கள். நாய்களின் பாதங்களை ஆராய்ந்து சிகிச்சை செய்யாமல் யாரும் உறங்கச் செல்லவில்லை. இவ்வாறு செய்தும் நாய்கள் சக்தி இழந்துகொண்டே வந்தன. பனிக்காலத் தொடக்கத்திலிருந்து அவை ஆயிரத்து எண்ணுறு மைல்கள் வண்டியை இழுத்துக்கொண்டு பிரயாணம் செய்திருக்கின்றன. உரம் மிகுந்த நாய்களும் ஆயிரத்தெண்ணுாறு மைல்கள் பிரயாணம் செய்தால் சோர்ந்துபோகும். பக் ஒருவாறு சமாளித்து வந்தது; மற்ற நாய்கள் ஒழுங்கு தவறாமல் வேலை செய்வதையும் கவனித்துக் கொண்டது; இருந்தாலும் அதுவும் களைத்துப்போய்விட்டது. ஒவ்வோர் இரவிலும் தூங்கும்போது பில்லி தவறாமல் கத்திக்கொண்டும் சிணுங்கிக் கொண்டும் இருந்தது. ஜோ முன்னைவிட அதிகமாகச் சிடுசிடுப்பு கொண்டது. சோலெக்ஸை மற்ற நாய்கள் அணுகவே முடியவில்லை. ஆனால், டேவ்தான் மற்ற நாய்களைவிட அதிகம் வருந்திற்று. ஏதோ ஒரு கோளாறு அதற்கு ஏற்பட்டுவிட்டது. எரிந்து விழுகின்ற அதன் தன்மையும் சிடுசிடுப்பும் அதிகமாயின. முகாமிடத் தொடங்கியதும் அது வளை தோண்டிப் படுத்துவிடும். அந்த வளைக்குச் சென்றுதான் அதற்கு உணவு கொடுக்கவேண்டும். சேணத்தைக் கழற்றியவுடன் அது படுத்துக்கொள்ளும். அடுத்த நாட்காலையில் மீண்டும் சேனம் போடும் வரையில் அது எழுந்திராது. சில சமயங்களில் வண்டி திடீரென்று நிற்கின்றபோதும், நின்ற வண்டியைப் பலமாக அசைத்து இழுக்கத் தொடங்குகின்ற போதும் அது வலி தாங்காமல் அலறும். டேவைப் பரிசோதித்துப் பார்த்ததில் எந்தவிதமான கோளாறும் தென்படவில்லை. சறுக்கு வண்டிகளை ஒட்டுபவர்களெல்லாம் அதன்மேல் கவனம் செலுத்தினார்கள். உணவு வேளைகளில் படுத்துறங்கப் போகுமுன் ஒய்வாகக் கூடியிருக்கும்போது அதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் இரவு அனைவருங் கூடி ஆலோசித்தார்கள், டேவை அதன் வளையிலிருந்து பிடித்து வந்து தீ வெளிச்சத்திலே நன்றாகப் பரிசோதித்தார்கள். உடம்பையெல்லாம் அழுத்தியும், குத்தியும் பார்த்தார்கள். அது பல தடவை கத்திற்று. உடம்புக்குள்ளே ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது இன்னதென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எலும்பொன்றும் முறிந்திருக்க வில்லை.