பக்கம்:கானகத்தின் குரல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 59 கான்ஸியர் பார் என்ற இடத்தை அடைவதற்குள் அது மிகவும் பலவீனமடைந்து வண்டியிற் பூட்டியிருக்கும்போதே பல தடவை கீழே விழுந்துவிட்டது. தபால்வண்டிப் பொறுப்பை ஏற்ற ஸ்காச்சு இனத்தான் வண்டியை நிறுத்தி டேவை அவிழ்த்துவிட்டு அதன் ஸ்தானத்தில் சோலைக்ஸைப் பூட்டினான். வண்டிக்குப் பின்னால் டேவ் பாரமின்றிச் சும்மா வரவேண்டும் என்பது அவன் கருத்து. நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் டேவ் இதை விரும்பவில்லை. வண்டியிலிருந்து அவிழ்க்கும்போதே அது உறுமிக்கொண்டும் சீறிக்கொண்டுமிருந்து, சோலெக்ஸை அதனுடைய இடத்தில் பூட்டியதைக் கண்டதும் மனதுடைந்து அது சிணுங்கியது. தீராத நோய்வாய்ப்பட்டிருப்பினும் அதனுடைய ஸ்தானத்தில் மற்றொரு நாய் வேலை செய்வதை அதனால் தாங்கமுடியவில்லை; வண்டியிழுப்பதிலே அதற்கு அத்தனை உற்சாகமும் பெருமையுமிருந்தன. வண்டி புறப்பட்டதும் அது பக்கவாட்டிலே ஒடி சோலெக்ஸின் மீது பாய்ந்து கடிக்கலாயிற்று. சோலெக்ஸை மறுபக்கத்திலே தள்ளவிட்டுத் தனக்குரிய இடத்திலே திராஸ் வார்களுக்கிடையிலே புகுந்து கொள்ளவேண்டும் என்பது அதனுடைய நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே ji[ நோய் தாங்காமல் குரைத்துக் கொண்டும்ي{لى சிணுங்கிக்கொண்டுமிருந்தது. ஸ்காச்சு இனத்தான் அதைத் தன் சாட்டையால் அடித்து விரட்ட முயன்றான். அது சாட்டையடியைப் பொருட்படுத்தவேயில்லை. அதைப் பலமாகத் தாக்க அவனுக்கும் மனம் வரவில்லை. வண்டியின் பின்னால் பாதையிலே செல்வது எளிது; ஆனால் டேவ் அப்படிச் செல்ல மறுத்தது. பாதையின் பக்கங்களிலே ஒழுங்கில்லாமல் கிடந்த பனிக்கட்டிகளின்மீது ஒடிக்கொண்டே அது தனது ஸ்தானத்தைக் கைப்பற்ற முயன்றது. அதனால் அது மிகவும் களைப்படைந்து துயரத்தோடு ஊளையிட்டுக்கொண்டு கீழே சாய்ந்துவிட்டது. சறுக்கு வண்டிகளெல்லாம் அதைக் கடந்து சென்றுவிட்டன. - அதன் உடம்பிலே எஞ்சியிருக்கும் ஒருசிறிது பலத்தையும் பயன்படுத்தி டேவ் தடுமாறித் தடுமாறி எழுந்து ஓடியது. வண்டிகள் மீண்டும் ஒரிடத்திலே தங்கியபோது அது அங்கே வந்து சேர்ந்துவிட்டது. உடனே அது சோலெக்ஸ் இருந்த இடத்தில் போய் அதனருகில் நின்றது. சற்று நேரத்திற்குப்பின் பயணத்தைத் தொடங்குவதற்காக நாய்களை அதட்டினார்கள். நாய்கள் முன்னால் சுலபமாகத் தாவின. ஆனால் வண்டி நகரவில்லை. எல்லோருக்கும்