பக்கம்:கானகத்தின் குரல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அலகத்தின் குரல் ஒரே ஆச்சரியம். சோலெக்ஸின் பக்கத்திலேயுள்ள இரண்டு திராஸ் வார்களையும் டேவ் கடித்தெறிந்துவிட்டு அதற்குரிய ஸ்தானத்தில்போய் நின்றுகொண்டிருந்தது. தனக்குரிய இடத்திலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்பதுபோல அது தோன்றியது. அதன் கண்களிலே கெஞ்சும் பார்வை இருந்தது. வண்டியோட்டுபவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிரை வாங்குகின்ற வேலையாக இருந்தாலும் அந்த வேலையைக் கொடுக்க மறுத்தால் நாய்கள் எவ்வாறு மனமுடைந்து போகின்றன என்பதைப் பற்றி அவனுடைய தோழர்கள் பேசலானார்கள். வயது முதிர்ந்து தளர்ச்சியுற்ற பல நாய்களும், ஊனமடைந்த பல நாய்களும் தம்மை வண்டியில் பூட்டுவதை நிறுத்தியவுடன் மனமுடைந்து இறந்துபோன சம்பவங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். டேவ் எப்படியும் சாகப்போகிறது, அது நிம்மதியாகச் சாக வேண்டுமானால் அதை வண்டியில் பூட்டுவதே நல்லதென்று அவர்கள் எண்ணினார்கள். அதனால் அதற்கு மறுபடியும் சேணம் போட்டார்கள். உள்ளேயிருந்த கோளாறால் டேவ் பலமுறை தன்னையறியாமல் அலறினாலும் அது பொறுமையோடு வண்டியை இழுத்துக்கொண்டு சென்றது. அடிக்கடி அது கீழே விழுந்தது: வண்டியோடு அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டு மற்ற நாய்கள் சென்றன. ஒரு தடவை வண்டி அதன் மேலேயே ஏறிவிட்டது. அதனால் அதன் பின்னங்கால் ஒன்றில் அடிபட்டது. டேவ் நொண்டி நொண்டிச் செல்லலாயிற்று. அடுத்த முகாம் வரையில் அது எப்படியோ சமாளித்துவிட்டது. வண்டி ஒட்டுபவன் அதைத் தீயின் அருகிலேயே படுக்க வைத்தான். அடுத்த நாட் காலையில் அது மிகவும் சோர்ந்துவிட்டது. அதனால் இனிப் பிரயாணம் செய்யமுடியாது. இருந்தாலும் சேணம்போடுகிற சமயத்தில் அது வண்டியோட்டுகிறவனிடம் ஊர்ந்துகொண்டே சென்றது. நடுங்கிக்கொண்டே அது எழுந்து நிற்க முயன்றது; ஆனால் தட்டுத் தடுமாறி விழுந்தது; பிறகு தவழ்ந்துகொண்டே மற்ற நாய்களிடம் செல்லலாயிற்று. முன்னங்கால்களை அது கொஞ்சம் முன்னால் நகர்த்தும்; பிறகு உடம்பை அசைத்து முன்னால் இழுக்கும்; இப்படியே அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. ஆனால், அதன் சக்தியெல்லாம் போய்விட்டது. அது மூச்சுதிணறி பனியிலே விழுந்து கிடந்தது. மற்ற நாய்கள் வண்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டன. அவற்றை ஆவலோடு பார்த்துக் கொண்டு டேவ்