பக்கம்:கானகத்தின் குரல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 71 செயலற்றுக் கிடந்தது. வெகுதூரம் வரையில் அதன் துன்பக்குரல் கேட்டது. ஆற்றுவெளியிலே இருந்த மரக் கூட்டத்திற்குப் பின்னால் வண்டி மறையலாயிற்று. அங்கே வண்டியை நிறுத்தினார்கள். ஸ்காச்சு இனத்தான் முகாம்போட்டிருந்த இடத்தை நோக்கித் திரும்பிப்போனான். மற்ற மனிதர்கள் நாவொடுங்கியிருந்தார்கள். சுழல் துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் கேட்டது. ஸ்காச்சு திரும்பி வேகமாக வந்து சேர்ந்தான். சாட்டைகள் ஒலித்தன; மணிகள் ஒசையிட்டன; வண்டிகள் பனிப்பாறையிலே நறநற வென்று சப்தமிட்டு முன்னேறின. மரக்கூட்டத்திற்குப் பின்னால் என்ன நடந்ததென்பது ஒவ்வொரு நாய்க்கும் தெரியும். பக்குக்கும் தெரியும்.