பக்கம்:கானகத்தின் குரல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிபெயர்ப்பாளரின் முகவுரை நாய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அது மிகவும் விசுவாசமுள்ள பிராணி. அதில் எத்தனையோ இனங்களுண்டு. அவற்றில் ஓரினத்தைச் சேர்ந்த ஒரு நாயைப் பற்றிய கதை இது. உள்ளத்தைக் கவரும் கதை. ஜாக்லண்டன்தம் சொந்த அனுபவத்தைக் கொண்டே இதைக் கற்பனை செய்திருக்கிறார். கனடாவின் வடமேற்குக் கோடியிலே அலாஸ்காவின் அருகில் யூக்கான் பிரதேசம் இருக்கிறது. அதிலே கிராண்டைன் மாவட்டம் என்பது அலாஸ்காவின் எல்லையில் உள்ளது. அங்கே பாய்கிற பல ஓடைகளில் தங்கத்துரள் கிடைப்பதை 1896-ல் அறிந்தார்கள். அதனால் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே விரைந்தோடினார்கள். தங்கமெடுக்கச் சென்ற சிலர் பெரிய செல்வர்களானார்கள். ஆனால் பலர் கடுங்குளிராலும் நோயாலும் உயிரிழந்தார்கள். ஆர்க்டிக் பகுதியிலுள்ள தட்பவெப்ப நிலையே கிளாண்டைக் கிலும் இருக்கிறது. அதனால் ஆண்டின் ஏழு மாதங்களுக்கு அங்கே கடுங்குளிராக இருக்கும். தரையில் உறைபனி மூடியிருக்கும். மே மாதத்தின் மத்தியிலிருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் அங்கே 24 மணி நேரமும் பகலாகவே இருக்கும். நடுநிசியிலே சூரியனைப் பார்க்கலாம். இந்தப் பகுதியிலே தங்கத்தைத் தேடி வீணாக அலைந்தவர்களில் ஜாக் லண்டனும் ஒருவர். அதனால்தான் அவர் இக்கதையை மிகுந்த சுவையோடு எழுத முடிந்திருக்கிறது.