பக்கம்:கானகத்தின் குரல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 85 கேட்பனவும் அவ்வாறே மந்தமாகப்புலனாயின. அவைகளுக்கு அரைஉயிர் கூட இல்லை; கால் உயிரும் இல்லையெனலாம். அவைகள் எலும்பு மூட்டைகள்; உயிர்பொறி மங்கலாக ஊசலாடிக்கொண்டிருக்கும் எலும்புமூட்டைகள். ஏதாவது ஓரிடத்தில் தங்கும்போது அவை வண்டியில் பூட்டியபடியே உயிரற்றவைபோல விழுந்துகிடந்தன. அந்த நிலையிலேயே உயிர்பொறி மங்கி மறைந்துவிடும்போலத் தோன்றியது. பிறகு சாட்டையடியோ தடியடியோ விழும்போது அந்தப்பொறி கொஞ்சம் அசைந்து மேலெழும்; நாய்கள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்று தள்ளாடித் தள்ளாடி முன்செல்லும். - நல்ல சுபாவமுடைய பில்லியின் இறுதிநாள் வந்தது. அது ஓரிடத்தில் கீழே விழுந்தது; பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை. சுழல்துப்பாக்கியை விற்றுவிட்டதால், ஹால் கோடரியை எடுத்து அதன் தலையின் மேல் தாக்கினான்; பினமான பில்லியைப் பிறகுதான் வண்டியிலிருந்து அவிழ்த்து ஒருபுறமாக இழுத்தெறிந்தான். பக் இதைப் பார்த்தது; மற்ற நாய்களும் பார்த்தன. இதே கதி தங்களுக்கு விரைவில் நேரப்போகிறதென்று அவைகள் உணர்ந்துகொண்டன. அடுத்த நாள் கூனாவின் வாழ்க்கை முடிவுற்றது. மீதி ஐந்து நாய்களிருந்தன. நிலைமை மிக மோசமாகிவிட்டபடியால், துன்புறுத்தவோ அச்சுறுத்தவோ ஜோவிற்குத் திராணியில்லை. நொண்டியாய்ப்போன பக்குக்குத் தீயவை நினைக்க உணர்ச்சியே இல்லை. ஒற்றைக்கண் சோலெக்ஸ் ஒழுங்காக வண்டியிழுக்க இன்னும் முயன்றதென்றாலும் உடம்பிலே வலுவின்மையால் துக்கப்பட்டது. பனிக்காலத்திலே இந்த முறை டிக் அதிகமாகப் பிரயாணம் செய்யவில்லை. எனவே, அது சற்றுத் துடுக்காக இருந்தது. அதனாலேயே அதற்கு அதிகமாக அடி கிடைத்தது. பக் இன்னும் தலைமைப்பதவியிலேயே முன்னால் சென்றது; என்றாலும் அது மற்ற நாய்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தவில்லை. பலவீனத்தால் அதன் பார்வை மங்கிற்று. கால்களால் பாதையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே அது சென்றது. வசந்தகாலம் அழகாகக் காட்சியளித்தது. ஆனால், அதன் அழகை மனிதஇனத்தைச் சேர்ந்த மூவரும் அறியவில்லை; நாய்களும் அறிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு நாட்காலையிலும் கதிரவன் முதல் நாளைவிடச் சற்று முன்னதாகவே உதிக்கத் தொடங்கினான்; மாலையில் அவன் மறையுங்காலமும் பின்தள்ளிக்கொண்டே போயிற்று. காலையில் மூன்று மணிக்கே விடிந்துபோகும். இரவிலே