பக்கம்:கானகத்தின் குரல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 : கனகத்தின் குரல் அந்தக் குரலைக் கேட்கும் போதெல்லாம் அது தீயையும் மிதிப்பட்ட தரையையும் புறக்கணித்து விட்டுக் கானகத்திற்குள்ளே புகுந்து சுத்தலாயிற்று. எங்கு செல்வதென்றே அதற்குத் தெரியாது; ஏன் செல்ல வேண்டும் என்பதும் தெரியாது. அவற்றைப் பற்றி கேள்வியும் எழவில்லை. கானகத்தின் மத்தியிலிருந்து தன் மீது ஏகாதிபத்தியம் செலுத்தும் அந்தக் குரலொன்றையே கேட்டது. ஆனால், கானகத்திற்குள் புகுந்து அதன் மிருதுவான மண்ணையும் பசுமை இருளையும் அடையுந்தோறும் அதற்கு ஜான் தார்ன்டனுடைய நினைவு தோன்றும். அவன் மேலுள்ள அன்பின் வலிமை அதை மீண்டும் கூடாரத்திற்கு இழுத்துவிடும். தார்ன்டன்தான் அதைக் கட்டிவைத்திருந்தான். அவனைத் தவிர மற்ற மனிதஇனத்தை அது பொருட்படுத்தவில்லை. அந்தப் பக்கமாக வருகின்ற பிரயாணிகள் அதனிடம் அன்பு காட்டலாம்; அதைத் தடவிக் கொடுக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் அது மதிக்கவில்லை. மிக ஆர்வத்தோடு எவரும் அதை அணுகினால் அது எழுந்து அப்பால் சென்றுவிடும். தார்ன்டனின் கூட்டாளிகளான ஹான்ஸும், பீட்டும் பல நாட்களுக்குப்பிறகு படகிலே திரும்பி வந்தபோது அவர்களைப் பக் கண்னெடுத்துப் பார்க்கவேயில்லை; அவர்கள் தார்ன்டனுக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்தபிறகுதான் அவர்களை ஒரளவு சகித்துக்கொண்டது: அவர்கள் கொடுக்கும் பண்டங்களை ஏற்றுக்கொண்டது. அவர்களும் தார்ன்டனைப் போலவே மண்ணுக்கு அணுக்கர்; எளிய சிந்தனையும், தெளிவான நோக்கமும் உடையவர்கள். டாஸ்னில் உள்ள மரஅறுப்பு எந்திர சாலைக்குப் பக்கத்திலே ஒடத்தைச் செலுத்தி நிறுத்துவதற்குள் அவர்கள் பக்கைப் பற்றியும், அதன் இயல்பைப் பற்றியும் அறிந்துகொண்டார்கள்; அதனால் ஸ்கீட், நிக் ஆகிய நாய்களோடு நெருங்கிப்பழகுவதுபோல அதனுடன் பழக முனையவில்லை. தார்ன்டன் மீது உள்ள அன்பு மட்டும் பக்கின் உள்ளத்திலே வளர்ந்துகொண்டேயிருந்தது. கோடைகாலத்தில் பிரயாணம் செய்யும்பொழுது அவன் ஒருவனால்தான் பக்கின் முதுகின் மேல்சுமை ஏற்றமுடியும். தார்ன்டன் ஆணையிட்டால் பக் எதையும் செய்யத் தயாராக இருக்கும். ஒரிடத்தில் கொண்டுவந்த மரங்களுக்காகக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் டாஸனை விட்டு டனானாவின் முகத்துவாரத்திற்குச் சென்றார்கள். ஒருநாள் அவர்கள் ஒரு குன்றின் உச்சியில் நாய்களோடு அமர்ந்திருந்தார்கள். அந்த உச்சியின் ஒருபுறம் முந்நூறு அடி உயரத்திற்கு ஒரே செங்குத்தாக இருந்தது. ஜான் தார்ன்டன் அந்தச் செங்குத்தான பகுதிக்கருகில் உட்கார்ந்திருந்தான். அவன்