பக்கம்:கானகத்தின் குரல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 97 தோளருகில் பக் நின்றது. தார்ன்டனுக்கு ஒரு விளையாட்டான எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை பரிசோதிக்கும் முன், அவன் ஹான்ஸையும், பீட்டையும் தான் செய்யப் போவதைக் கவனிக்கும்படி செய்தான். பக்கை நோக்கி, தன் கையை வீசி, ஆழ்ந்த பள்ளத்தைக் காட்டி, 'பக், அங்கே குதி பார்க்கலாம் என்று கட்டளையிட்டான். அடுத்தகணத்திலே அவன் பக்கை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று. அந்தப் பாதாளத்தின் விளிம்பிலே பக்கைத் தடுத்துநிறுத்த அவன் திணறிக் கொண்டிருந்தான். ஹான்ஸும், பீட்டும் சேர்ந்து பெருமுயற்சி செய்து தார்ன்டனும், பக்கும் படுகுழியில் வீழ்ந்து மடியாமல் காப்பாற்றினார்கள். கொஞ்ச நேரம் யாராலும் பேச முடியவில்லை. பிறகு பீட், 'இப்படியுமா செய்யும்' என்று கூறினான். தார்ன்டன் தலையை ஆட்டினான். 'இல்லை; இது அற்புதம் மட்டுமில்லை; பயங்கரமும்தான். பக்கின் விசுவாசத்தை நினைத்தால் எனக்குச் சில சமயங்களில் பயம் உண்டாகிறது' என்றான் அவன். "அது பக்கத்தில் இருக்கும்பொழுது உன் மேல் கை வைக்கிற பேர்வழி நான் இல்லை, அப்பா' என்று தீர்மானமாகக் கூறிக் கொண்டே பக்கைப்பார்த்துத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். 'அது நானும் இல்லேடா, அப்பா!' என்று ஹான்ஸாம் கூறினான். பீட் பயந்தது சரியேயென்று அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே வெளியாயிற்று. அவர்கள் சர்க்கிள் சிடி என்னும் இடத்திற்குச் சென்றிருந்தனர். அங்கே பர்ட்டன் என்ற தீயவன் ஒரு மதுபானக்கடையிலே ஒர் அப்பாவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். தார்ன்டன் குறுக்கிட்டு சமாதானப்படுத்த முயன்றான். ஒரு மூலையில் பக் தனது முன்னங்கால்களின் மேல் தலையை வைத்துப் படுத்துத் தார்ன்டனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென்று பர்ட்டன் தார்ன்டன்மேல் மோதி அடித்தான். தடுமாறிக் கீழே விழப்போனான் தார்ன்டன். ஆனால், நல்ல வேளையாக ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றான். அங்கிருந்தவர்கள் காதிலே, நாய் குரைக்கும் குரலில்லை, சிம்ம கர்ஜனை ஒலித்தது. பக்தாவி எழுந்து பர்ட்டனின் கழுத்தை நோக்கிப் பாய்வதையும்அவர்கள் பார்த்தனர். பர்ட்டன் தன் கைகளை நீட்டி நாயைத் தடுக்க முயன்றான்.அந்த முயற்சியிலே அவன் மல்லாந்து கீழே விழுந்தான். பக் அவன் மேலே ஏறி நின்றது. கைகளிலும் கழுத்திலும் மாறி மாறி அது கடித்தது. அவன் தொண்டை கிழிந்துபோயிற்று. அதற்குள் அங்கிருந்தவர்கள் எல்லோருமாகச்