பக்கம்:காப்பியக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv போற்றுவர் என்பதும், வினையின் பயன எஞ்ஞான்றும் விலக்க ஒண்ணுது என்பதும் சிலப்பதிகாரக் காவியத்திலே செம்மையாக உணர்த்தப்படுகின்றன. இத்தகைய உயரிய கதை சில காலத்துக்கு முன்னர்வரை இச் காட்டிலே சீரழிந்து நாடகமேடையில் நிலவி வந்தது. கோவலனைக் காமுகனுக்கி, மாதவியை வேசியாக்கி, கண்ணகியைக் காளியாக்கி, சிலப்பதிகாரக் கதையைப் பாழாக்கினர் நாடக மாக்கள். இக் காலத்தில் அவ் விழிதகைமை நீங்கி வருகின்றது. தமிழ் மக்கள் சிலப்பதிகாரத்தைச் சீராட்டத் தொடங்கி விட்டனர். அந்த வகை யில் தமிழ் நாட்டார்க்குச் சிறந்த தொண்டு செய்து வருகின் ருர் அன்பர் திரு. அ. மு. பரமசிவானந்தனர். பல்லாண்டுகளாக அவரு டைய செந்தமிழ் புலமையையும், ஆராய்ச்சித் திறனையும், சொல் வன்மையையும் நான் நன்கு அறிவேன். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மொழியைப் பேணி வளர்க்கும் பேராசிரியாாகிய அந் நண்பர் கடவுளர் போற்றும் தெய்வம் என்னும் பெயரால் கண்ணகியின் வரலாற்றை இனிய, எளிய உரை நடை நூலாக ஆக்கி அளித்திருக்கின்ருர். சிலப்பதிகாரத்திலுள்ள நெஞ்சையள்ளும் அடிகள் ஆங்காங்கு உரை நடையின் இடையிடையே அமைந்து அழகு செய்கின்றன. கற்ருர்க்கும் மற்ருர்க்கும் இந்நூல் நல்ல தமிழ் விருந்தாகும் என்பதில் ஐயமில்லை. கண்ணகியின் மாபில் வந்த தமிழ் நாட்டுப் பெண் மக்கள் சிறப்பாக இந்நூலேக் கற்று, தமிழ் நாட்டு அற நெறியைப் பாதுகாத்தல் வேண்டும் என்பது என் ஆசை. எழுத்தாலும் சொல்லாலும் செந்தமிழ்ப் பணி செய்து வரும் இந் நூலாசிரியருக்குத் தமிழகத்தார் நன்றி என்றும் உரிய தாகுக. சென்னைப் பல்கலைக் ரா. பி. சேதுப் பிள்ளை 51 س-5 -- 11