பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

539

உரு மறையும்படி பெருகுதல். ஏற — வெள்ளம் உயர. என் செய்தி - அதை மாற்றுவதற்கு என்ன செய்வாய்? வான்—ஒளி, மதியம்—பிறை, அதில் மறுவின்றி முற்றும் வெண்மையாக இருத்தலின் வெண்மதி என்றார். தெழித்து —ஒளித்து.

‘ஈர்த்து ஓடும் திரை பெருகின் என் செய்தி?’ என்று முடிக்க.]

'இது பொல்லாத கங்கை. இதை நம்பலாகாது. என்றைக்காவது திடீரென்று பெருகி ஆபத்தை விளைக்கலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது போலச் சொல்கிறார்.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 90-ஆவது பாட்டு இது.