பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



579

[படி-பூமி. வேம்-வேகும்; இடைக்குறை. திசை-திசையிலுள்ள பொருள்கள்; ஆகுபெயர். இடிக்கின்-இடிபோல முழங்கினால்; தன் கொம்பினால் இடித்தால் என்றும் பொருள் கொள்ளலாம். உலகு-உலகத்தில் உள்ள உயிர்கள். ஏங்கும்–என்ன ஆகுமோ என்று எண்ணி நையும். அடுக்கல்-மலை. மலையொடு பொருவதைச் சொன்னதால், ஏறு என்பது ஆண் சிங்கத்தைக் குறித்தது. ஆன் என்பது பசுமாட்டின் பொது: ஏறு, அவற்றின் ஆண். பொன் ஒப்பாய்-நிறத்தால் பொன்னை ஒப்பவனே; 'பொன் வரையே போல்வான்” (8), மேனி, செம்பொன் அணிவரையே போலும்” (39), ஆங்கவன்றன் பொன்னுருவில்” (58), 'பொன் விலங்கல் போலாம்: (60), ஆம்பொன் உருவடிவில்” (67), "தன்போலும் பொற்குன்றும்” (83) என்று பல இடங்களிலும் இதை அம்மையார் சொல்வதைக் காண்க.

அடியவர்கள் தம் உள்ளத்தே பொன்னைப் போல் பொதிந்து வைத்தலால், 'பொன் ஒப்பாய்’ என்றார் எனலும் ஆம். ஓகாரங்கள்: ஐயம். ஒன்றா-ஒன்றாக; ஒரே விடையாக.

‘பொன் ஒப்பாய், நின் ஏறு இத்தகையது. அது சிங்கமோ, ஆனேறோ, இடியோ? ஒன்றைச் சொல்’ என்றார்.]

அற்புதத் திருவந்தாதியில் வரும் 100-ஆவது பாட்டு இது.