பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அவன். அந்த இரண்டு கனிகளையும் புனிதவதியார் வாங்கி வைத்துக் கொண்டார்.

அப்போது ஒரு சிவனடியார் மிகவும் பசியுடன் அங்கே வந்து சேர்த்தார். மிக்க வாட்டத்துடன் இருக்கும் அவர் பசியை உடனே ஆற்ற வேண்டும் என்று எண்ணினார். புனிதவதியார். ஆனால் அப்போது அன்னம் மாத்திரம் சித்தமாக இருந்தது; கறியமுது ஆகவில்லை. இருப்பினும், அடியவருடைய பசியை அறிந்து, உடனே இலையைப் போட்டு உணவு பரிமாறத் தொடங்கினார். தம் கணவன் அனுப்பியிருந்த மாம்பழங்களில் ஒன்றை வெஞ்சனமாக இட்டார். அடியார் வயிறார உண்டு அம்மையாரை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

நண்பகவில் வழக்கம் போல் கடையிலிருந்து பரமதத்தன் வீட்டுக்கு வந்தான். நீராடி விட்டு உண்ண உட்கார்ந்தான். இலையில் எல்லாம் படைத்து விட்டு, அவன் அனுப்பிய பழங்களில் எஞ்சியிருந்த ஒன்றை இட்டார் புனிதவதியார். அந்தக் கனியை உண்ட வணிகன் அது மிகவும் சுவையுள்ளதாக இருப்பதை அறிந்து, "எங்கே, மற்றொரு பழம் இருக்கிறதே; அதையும் கொண்டு வந்து வை” என்றான்.

அம்மையார் அதை எடுத்து வருவதற்காகச் செல்பவரைப் போல உள்ளே போனார். உள்ளே பழம் ஏது? ‘இவர் ஆசைப்பட்டுக் கேட்கிறாரே! நான் என் செய்வேன்?’ என்று அப்போது புனிதவதியாருடைய உள்ளம் தத்தளித்தது. அவருடைய நிலை கண்டு இரங்கினான் சிவபெருமான். அவனருளால் ஒரு மாங்கனி அம்மையாருடைய கையில் வந்திருந்தது ‘இறைவன் திருவருள் இருந்தபடி என்ன ஆச்சரியம்!’ என்று எண்ணிய அம்மையார் அதைக் கொண்டு போய்த் தம் கணவனுடைய இலையில் பரிமாறினார்.

அதைப் பரமதத்தன் உண்டான். அது எங்கும் காணாத இனிய சுவையை உடையதாக இருந்தது. அது வரையில் அவன் உண்ட மாம்பழங்களுக்கு இல்லாத தனிச் சுவையில் அதில் கண்டான். “முன்னால் நான் உண்ட பழத்தைப் போல்