பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

கொடுமையான யுத்தத்தின் விளைவு என்னவென்ருல், வெற்றி பெற்றுள்ளவர்களில் சிலர் இன்னும் பற்பல ஆண்டுகள் வரை தலையெடுக்க முடியாதவாறு ஏழ்மைப் படுகுழியில் ஆழ்த்தப் பட்டுவிட்டார்கள் தோல்வி யுற்றவர்களோ கடைசித் தும்புதுளசி வரை சுரண்டப் பட்டு விட்டார்கள். வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு இனம் மூன்ரும் கட்சியேயாகும். அதுவோ கர்வத்தினுல் முன்னேப் பார்க்கிலும் அதிகமான மடத்தனத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. ஏனெனில், மற்றெவரையும் விட மிகுந்த புத்தி சாலியும் பலசாலியும் தானே தான் என்று அது கம்பிக் கொண்டிருக்கிறது. சென்று போனதை விட மிகுதியும் அர்த்தமற்றதாயும், முட்டாள்தனமானதாகவும் விளங்கக் கூடிய மற்றுமொரு புதிய அக்கினிக் குண்டத்துக்காக' ( யுத்தத்திற்காக ) எல்லோருமே மறைமுகமாகவோ பகிரங்கமாகவோ உழைத்துக் கொண்டிருக்கிரு.ர்கள்.

'கலாசார அபிவிருத்திக்கு யுத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். அது தான் கலாசார வளர்ச்சி பெற்ற காடுகளின் மகோன்னத சக்தியும், அவற்றின் ஆண்மையை வெளிப்படையாக எடுத்துக் காட்டும் காட்சியும் ஆகும்."விவிசைட் எனும் புத்தகத்தில் வருகிற வீரர்'களில் ஒருவனை பிராட்ஸ் என்பவன். முற்றிவிட்ட ஜனத் துவேஷப் பண்போடு இவ்விதம் குறிப்பிடுகிருண்.

உண்மையிலேயே அவன் ஒரு அரக்கன் தான். அவனுக்கு உரிய இடம் ஜெயிலிலே யாகும். இத்தகைய மனிதர்கள் தான் விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டியவர்கள்.

ஜோனெஸ் பீச்சருக்கு மரண தண்டனை விதிக்கப் படுமானுல், பிராட்ஸின் இனத்தைச் சோர்ந்த போக்கிரி களேயும், அடாத வகையில் தலையெடுக்கத் துணிந்தவர்களே யும் கியாயமானவர்களாகக் காட்டுவதாகத்தான் முடியும்,