பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோனேஸ் பீச்சரின் வழக்கு விசாரணை 10?

பீச்சரின் விசாரணை அல்லது, ஏழுவருடச் சித்திர வதைக்குப் பின்னர் ஸாக்கோவையும் வான் ஸெட்டியை யும் கொலேபுரிந்தது போன்ற தற்காப்பு முயற்சிகள்' விலக்கமுடியாத அழிவிலிருந்து முதலாளி வர்க்கத்தைப் பாதுகாக்க முடியாது; ஆல்ை அதன் மீதுள்ள வெறுப்பை மேலும் அதிகமாக்கி, அதனுடைய வீழ்ச்சியைத் துரிதப் படுத்தவே துணைபுரியும். இங்த உண்மையை முதலாளி வர்க்கம் ரொம்ப காலத்துக்கு முன்பே உணர்ந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இனி தருவதற்கு, எதுவும் முதலாளிவர்க்கத்திடம் இல்லே. தொழிலாளி மக்களே அடிமைத் தளையில் பூட்டி வைத்திருப்பதற்கு முன்பு அதற்கு உதவியாக இருந்த வழிவகைகள் இப்போது அதனிடம் கிடையாது. அதனுடைய பழிபாவங்களே கியாயமானவையாக மாற்றிக் காட்டக்கூடிய மதமோ, சிங்தாங்தமோ அதனிடம் கிடையாது.

அதற்கு இன்னும் பலம் அளித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு விஷயம், அதனுடைய தொழில்களேயும், தொழிற் கலைகளேயும் வளம் படுத்துகின்ற விஞ்ஞான சக்திகளைப் பாவத்துக்கு அஞ்சாத வகையில் அது தன்னலச் செயல் களில் ஈடுபடுத்தி வருவது தான்.

ஆனல், அது கூட வெகு காலம் டிேக்காது. விஞ்ஞான அறிஞர்கள் பிறரைவிட அதிகமான துண்ணறிவு உடைய வர்கள். ஆகவே, புல்லுருவிகளுக்கும் அட்டைகளுக்கும் உழைத்துக் கொண்டிருப்பதல்ை, தாங்கள் கலாசாரத்துக் காகப் பாடுபடவில்லே, ஆல்ை மக்களின் அழிவுக்கும் தங்களுடைய சொந்த கன்மைகளின் அழிவுக்குமே செயல் புரிகிருேம் என்று உணர்ந்து கொள்ளும் கிலேயை அவர்கள் சிக்கிரமே அடைவார்கள்.