பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் Hi}

பதின்ைகு பையன்கள் தப்பி ஓடிவிட்டார்கள். அவர் களில் பன்னிரண்டு பேரை குதிரைப் படைவீரர்கள் மீண்டும் பிடித்து விட்டார்கள். மற்றுமுள்ள இருவரின் இருப்பிடம் தெரியவில்லை. மற்றுமொரு சிறு பிள்ளே சித்திரவதை செய்யப்பட்டது. "தாய் தன் குழங்தை களைக் கொன்ருள். - இரண்டு குழங்தைகளுக்கும் விஷ வாயுப் பிரயோகம். காரணம், பட்டினிதான். 'விஷவாயு

வால் மரணம்-மற்றுமொரு நிகழ்ச்சி.’-கணவன், மனைவி,

கணவனின் வயோதிகத் தாய், மூன்று வயசுப் பெண்,

கைக் குழந்தை ஒன்று ஆகிய ஐந்து பேர் மூச்சு முட்டிச் செத்தார்கள். "பசி, கொலே வெறியைத் துரண்டி விட்டது” "மற்றுமொரு பெண் துண்டு துண்டாக வெட்டப்பட் டாள். 'சிறைவாசம் பிடித்து விட்டது'-ஐந்து வருடங் கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவன் விடுதலையான உடனே போலீஸ் முன் ஆஜரானன். தனக்கு வியாதி என்றும், தன்னுல் வேலை எதுவும் செய்ய முடியாது என்றும், தான் பிச்சை எடுக்க விரும்பவில்லை என்றும் முறையிட்டு, மீண்டும் தன்னே ஜெயிலில் அடைத்து விடும் படி கோரினன். முதலாளித்துவ அரசாங்கத்தின் நியாய பூர்வமான சட்டங்கள் இதை அனுமதிப்பதில்லை. ஆகவே, ஜெயிலில் பழகிப் போன அந்த ஆசாமி வெளியே செல் கிருன். ஒரு கடையின் சன்னல் கண்ணுடியை உடைத் தெறிகிருன் போலீசுடன் சண்டை பிடிக்கிருண். இந்த விதமாக. அவன் தான் விரும்பியதைப் பெற்று விடுகிருன்.

'லட்சாதிபதிப் பிச்சைக்காரன்'- என்பது வயதான கிழட்டுப் பிச்சைக்காரன் ஒருவன் இறந்து போகிருன். அவன் விட்டுச் சென்ற பொருள்களில் ஐம்பது லட்சம் வெள்ளி நாணயங்களும் காணப்பட்டன. -

"ஆஷ்டன் பிரபு 89 - வயதில் செத்துப் போளுர், அவருக்கு 3 கோடிப் பவுன்கள் சொத்து இருக்கிறது."