பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் 113

முழுவதையும் நான் மறுத்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று உணர்ச்சியற்ற குரலில் அவன் போலீஸ் அதிகாரியிடம் கேட்டான். இவை போன்றவை தான் பரபரப்பான செய்திகள் ஆகும். ஆல்ை, முத லாளித்துவ நாடுகளில் போலீசார் செய்கிற வேக்லகள் எல்லாமே பரபரப்பான விஷயங்களின் தொடர்ச்சி களாவே அமைவதால், கூர்ட்டனின் விவகாரம் சோவியத் வாசகருக்குவியப்பு அளிக்காது தான். இவை எல்லாம் ஏன் பிரசுரிக்கப் படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவே முடிய வில்லை. போலீஸ் செய்திகளின் மீது முதலாளித்துவ பத்திரிகைகள் எவ்விதமான விளக்க உரை எழுதுவது மில்லை. அவை சர்வசாதாரணமாகி விட்டன. ஆகவே அவற்றினுல் யாரும் கோபமோ கொதிப்போ கொள்வ தில்லே போலும் என்ற உணர்வு தான் நமக்கு ஏற்படுகிறது. முன்பெல்லாம், 1914 - 18 யுத்தத்துக்கு முன்பு, மக்கள் கொதிப்படைந்து கொண்டிருந்தார்கள். உணர்ச்சிவசப் பட்ட தனி மனிதர்கள் சிலர் சமுதாய அமைப்பின் சீர்கேடு கள்’பற்றி, தொட்டும் தொடாமலும் கட்டுரைகள் எழுது வது வழக்கம். அவர்கள் பலவிதமான கருத்துக்களையும் வெளியிடுவார்கள். சில சமயம் அச்சத்தினுல் துரண்டப் பட்ட அபிப்பிராயங்களாக இருந்திருக்கலாம் அவை. ஆனல் அநேகமாக, விபரீத கிகழ்ச்சி களால் அமைதி குலேயப் பெற்று விட்ட பண்பாடு உடைய பெரியவர்'களின் எரிச்சல் காரணமாகத் தான் அவை பிறந்திருக்கும்.

தற்காலத்தில், வாழ்வின் சகஜமான துயரச் செய்தி களில் முதலாளித்துவ பத்திரிகைகளுக்குச் சிரத்தையே கிடையாது. ஏனெனில் தினக்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி மனிதர்கள் செத்துப் போவது வழக்கமான கியதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. வாழ்வின் போக்கிற்கு அது எவ்விதமான