பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் i2}.

புதுயுகத்தின் வருங்காலத்தை நன்கு பிரதிபலிக்கும் இவ்வுண்மை நிகழ்ச்சிகளே அவர்கள் பத்திரிகைகளில் ஏன் பிரசுரிக்கக் கூடாது என்று நான் கேட்டேன்.

ஆல்ை, எனது கேள்வியை அவர்கள் அவர்களுக்கே உரிய சாதாரண முறையில் - அது என்னவோ முற்றிலும் சொந்த விஷயம் என்பது போல் - தான் புரிந்து கொண் டார்கள். அவர்கள் சொன்னது இதுதான்:

"நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் தான். என்ரு லும் இவ் விஷயத்தில் காங்கள் எதுவும் செய்வதற்கில்லே. புரட்சிக்கு உதவியாக நீங்கள் இங்கே பணம் திரட்ட முடியாது; சம்பாதித்துச் சேர்க்கவும் முடியாது. சூஸ்வெல்ட் உங்களை வரவேற்க எண்ணியிருக்கிருர் என்ற செய்தியை பத்திரிகைகள் பிரசுரித்த உடனேயே, இங்குள்ள ரஷ்ய ஸ்தானிகர் தலையிட்டு விட்டார். அத் துடன் உங்கள் காரியத்துக்கு ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. பத்திரிகைகள் பிரசுரித்தது ஆண்ட்ரியீவாவின் படம் அல்ல என்பதை காங்கள் கண்டு கொண்டோம். உங்கள் முதல் மனேவியும் குழந்தைகளும் வறுமையில் வாடி வதங்கவில்லை என்பதையும் காங்கள் அறிகிருேம். இருந்தாலும் கூட, இதை அம்பலப்படுத்துவதற்கு வேண்டிய சக்தி எங்களிடம் இல்லை. புரட்சிக்கு ஆதரவு தேடி நீங்கள் இங்கே உழைப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.”

"ஆளுல் பிரெஷ்கோவ்ஸ்காயாவை என் அனுமதித் திருக்கிருர்கள்?" - - - -----

இதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. அவர்கள் எண்ணம் தவருகவே முடிந்தது. நான் எதிர்பார்த்த அளவை விடக் குறைந்த வேலையே செய்ய முடிந்தது.