பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

"படுகொலை புரிவதற்காகப் பணம் கொடுத்திருக்கிருய் என்பதை நீ உணர்கிருயா?’ என்று நான் கேட்டேன்.

அவள் தன் முகம் பார்வையில் படாதபடி தனது தலையை இருளின் பக்கமாகச் சாய்த்துக் கொண்டாள். பிறகு அமைதியாகப் பேசினுள்:

"என்னல் அதைக் கொடாமல் இருக்க முடியாதே. அதோ அங்கே இருக்கிற அந்த வாய் என் தலையைக் கடித்து விடுவது என்று தீர்மானிக்குமானல் எனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒருவர் அவர் தான்-கிக்கலஸ் தான்.”

அவள் புன்னகை புரிந்தவாறே, ஜெர்மன் கெய்சரின் பற்கள் அலங்காரமாக மினு மினுத்த முகட்டைச் சுட்டிக் காட்டினுள். - "உண்மையைச் சொல்வதானல், பெருந்தினி தின்கிற அந்த வாய் என்னே தப்பு வழியில் கடக்கும்படி பண்ணு கிறது. ஆளுல் என்ன செய்வது? பார்க்கப்போல்ை, சீர் கேடு கூட ஒரேயடியாக வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய விஷயமாக இல்லை ...”

"சதா மக்களின் ரத்தத்திலேயே தோள்வரை தோய்த் தெடுக்கப்பட்டுள்ள ஒரு கரத்தின் மீது சாய்ந்து நிற்பது உனக்கு வெறுப்பாக இல்லேயா?”

"ஆல்ை வேறு கரம் இல்லாவிட்டால் மக்களின் ரத்தக்கறை படாத மன்னனின் கரம் ஒன்றைக் கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம், தெரியுமா? இன்று அவர் கள் அப்படித்தான் இருக்கிருர்கள் - நாளே அவர்கள். எப்படி இருப்பார்களோ? நான் ஒரு பெண். எனக்கு ஒரு கண்பன் அவசியம் தேவை. ஒரு குடியரசும், ஆசியாவைச் சேர்ந்த ஒரு கொடுங்கோலனும் கட்போடு கைகோத்துக்