பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் 雳

பட்ட மணப் பெண்ணின் மதிப்புற்ற நாமம் போலன்ருே தொனித்தது அருமையான அந்த வார்த்தை. உன் கடந்த காலத்தின் மகத்தான நாட்கள் தான் எத்தன எத்தனே! மக்களுக்கு ஒளிங்றை உற்சவங்களாக அன்ருே விளங்கின உன்னுடைய போர்கள். எல்லாம்! உனது துன்பங்களி லிருந்து மிக உயர்ந்த பாடங்களைக் கற்றறிந்தார்கள் அவர்கள். -

நீதிக்காக நீ செய்த சோதனையில் மிளிர்ந்த வலிவும் வனப்பும்தான் என்னே விடுதலேயின் வெற்றிக்காக உனது நேர்மை ரத்தத்தை கீ எவ்வளவு தாராளமாகச் சிந்தினுய் உன் ரத்தம் என்றென்றைக்கும் வற்றி உலர்ந்து விட்டது என்று கொள்ளவோ?

பிரான்ஸ் உலகின் மணிக் கோபுரமாய் கின்றன அன்று. அதன் உச்சியிலிருந்து பூமி முழுவதும் எதிரொலிக்கும் வகையில் மும்முறை விம்மி எழுந்தது நீதியின் நாதம். லெளகிகத் துயிலில் ஆழ்ந்து கிடந்த மக்களேத் தட்டி எழுப்பிய மூன்று ஒலிகள் அவைசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!

உன் மகன் வால்டயர், பேய் முகம் பெற்றிருந்த மனிதன், தன் வாழ்நாள் முழுதும் அற்பத்தனங்களே எதிர்த்து அசுரன் போல் போராடினன். அவனது விவேகமுள்ள கேலியின் விஷம், மிகுந்த வேகம் உடையதா யிருந்தது! தங்கள் வயிற்றுக்கு எவ்விதமான பாதகமும் ஏற்படாமலே ஆயிரமாயிரம் புத்தகங்களை விழுங்கிய பாதிரிகள் கூட, வால்டயர் எழுதிய ஒரே ஒரு பக்கத்தில் உள்ள நஞ்சினல் சாகடிக்கப்பட்டார்கள். பொய்களின் பாதுகாவலரான மன்னர்களேக் கூட உண்மையின் முன்பு தலைவணங்கச் செய்தான் அவன். பொய்மையின் முகத்தில் அவன் அறைந்த அறையின் துணிவும் வலிமையும் மகத்தானவை. பிரான்ஸ்! அவன்