பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் 17

நாடுகளிலுமுள்ள எழுத்தாளர்களுக்குக் கற்றுக் கொடுத் தவன் - சொற்களைக்கொண்டு ஜாலம் செய்யும் மந்திர வாதி-மதிப்பு மிகுந்த ஐரிகையின் சிறு துண்டு மீதும், தெருக்களில் கிடக்கும் சகதியின் மேலும் சமமாகவும் தெளி வாகவும் தன் ஒளியைப் பரப்புகிற சூரியனைப் போன்ற உண்மை நோக்கினன்-உண்மையில் அழகையும் அழகில் உண்மையையும் கண்ட அந்த பிளாபர் கூட உன்னே உனது பேராசைக்காக மன்னிக்க மாட்டான்; உன்னேக் கண்டால் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொள்வான்!

உனது மிகச் சிறந்த மக்கள் எல்லோரும் உனக்கு எதி ராகவே இருக்கிருர்கள். வட்டிக் கடைக்காரர்களின் ஆசை நாயகியே! உன்னே கினைத்து நானுற்ற அவர்கள், சதைபடிந்த உன் முகத்தைப் பார்க்காமல் இருப்பதற்காக, தங்களுடைய நேர்மையான விழிகளைத் தாழ்த்திக் கொள் கிருர்கள். அருவருப்பான சில்லறை வியாபாரியாக மாறி விட்டாய் .ே மானத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உயிரைக் கொடுக்கும் பண்பை உன்னிடமிருந்து கற்ற வர்கள் இனி உன்னை உணரப்போவதில்லை. அவர்கள் தங்கள் இதயங்களில் வேதனே பெருக, உன்னிடமிருந்து திரும்பியே செல்வர்.

பிரான்ஸ்! தங்கத்தின் மீது கொண்ட துராசை உன்னே இழிவு படுத்தி விட்டது. வட்டிக் கடைக்காரர் களுடன் நீ கொண்ட தொடர்பு உன் உண்மையான ஆத்மா சீர்கெட்டுப் போகும்படி செய்துள்ளது; அதன் நெருப்பை அழுக்கினலும் அற்பத்தனத்தாலும் அவித்து விட்டது.

சுதந்திரத்தின் தாய் ஆகிய ,ே ஜோன் ஆவ் ஆர்க் ஆன ,ே இரக்கமற்ற மிருகங்களுக்கு, அவை மீண்டும் மக்களே கசுக்கும் வகை தேடட்டும் என்பதற்காக, பலம் அளித்திருக்கிருய்.