பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடு பணி - - 29

இந்த நகரத்தில் எவ்வளவு அதிகமான கால் அணிகள். உடுப்புகள், சணல் நூல் புடவைகள். தொப்பிகள், மெல் லிய ரோமம் படிந்த தோல்கள், தோல் சாமான்கள், பிரயாணப் பைகள், சுருட்டுகள், புகைக்கும் குழாய்கள், கைத் தடிகள், மீண் பாண்டங்கள், மீன் பிடிக்கும் தள வாடங்கள், வேட்டைத் துப்பாக்கிகள், சிறுவர்களுக்கு உரிய பொம்மைகள், பெரியவர்களுக்கான விளையாட்டுச் சாமான்கள், கைக் கடியாரங்கள், தங்கச் சாமான்கள் நகைகள் இருக்கின்றன! பிரமிப்பூட்டும் பேரளவுதான். அவை எல்லாம் மிக்க சக்தியுடன் பளிச்சிடுகின்றன. அதனல், சீமான்களும் சீமாட்டிகளும் அவற்றை உபயோ கிப்பதற்கு உள்ள உரிமை பற்றிய பிரச்னை, அவற்றின் வசீகரமான பளபளப்பின் முன்னே மங்கி விடுகிறது.

முக்கியமாக, தின்பதற்குரிய பொருள்கள்தான் பல வகைப்பட்டதாகவும் மிக கிறையவும் இருக்கின்றன. அவற்றின் வெவ்வேறு தினுசுகள், சாப்பாட்டு சாஸ்திரத் தின் அபிவிருத்தி பற்றியும், சமையல் கலையின் வளர்ச்சி பற்றியும், மிகுதியும் பண்பட்ட மக்களின் வயிறு சம்பந்த மான தேர்ந்த ஞானம் பற்றியும் கம்மைச் சிக்திக்கும்படி செய்கின்றன. உணவுப் பொருள்கள் விற்கும் கடை களின் ஜன்னல்களில் உலகத்தின் காடுகள், கடல்கள், ஏரிகள், காடுகள், நதிகள் எல்லாம் உவந்தளித்த பொருள் கள் ஆடம்பரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புத்தம் புதியன, வாட்டி வதக்கப்பட்டவை, உப்புப் போட்டு உலர்த்தப்பட்டவை, டப்பாக்களில் அடைக்கப்பட்டவை இப்படி மாமிசம், மீன், கண்டு, வேட்டை மிருகங்கள், காய்கறிகள், பழங்கள், வாசனைச் சரக்குகள், வியஞ்சனங் கள், பால் கட்டிகள், மசாலேயிட்ட இறைச்சிகள், அடைகள், முரப்பா தினுசுகள், பிஸ்கத்துகள், கேக்கு, சாக்கலேட், கொக்கோ - இவை எல்லாம் பல்லாயிரக்