பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாரப் பாதுகாப்புக் காங்கிரசுக்கு 35

பிரெஞ்சு எழுத்தாளர்களது துரண்டுதலின் பேரில், உலகத்தில் உள்ள நாணயமான எழுத்தாளர்கள் பாசி ஸ்த்தையும் அதன் கொடுமைகளேயும் எதிர்க்கக் கிளம்பி இருக்கிருர்கள்.

இச் சிறந்த நோக்கம்'கலாசாரத்தின் தலைவர்'களுக்கு முற்றிலும் இயல்பானதே யாகும். கலைஞர்கள் காட்டி யுள்ள வழியை விஞ்ஞானிகளும் பின்பற்றுவார்கள் என்று நிச்சயமாக எதிர் பார்க்கலாம்.

மனிதத்துவத்தின் மாண்பு இரண்டு கால் ஒகாய்கள், பன்றிகள் ஆகியவற்றின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷய மாகும்; மனிதத்துவத்தின் உலக முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அனுதாபம் காட்டும் திறமை பெற்ற வர்க்கம் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு என் பதைச் சரித்திரம் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டது என்பது கினேவில் கிறுத்த வேண்டியதாகும். அங்த வர்க்கம் தான் பாட்டாளி வர்க்கம்.

ஆகவே, ஒத்துப்போக முடியாதவற்றை இனங்க வைக்கப் பாடுபடுவதற்கான வழியில் நம் முயற்சிகள் இருக்க வேண்டியதில்லை. முதலாளித்துவ சமுதாயத்தைச் சீர்திருத்த காம் முயல வேண்டாம். விரோதம் இல்லாமலும், மனிதவர்க்கத்தின் பெரும் பகுதியை அடக்கி ஒடுக்காமலும் முதலாளித்துவ சமூகம் வாழ முடியாது; வாழும் ஆற்றலும் அதற்குக் கிடையாது. அதன் அமைப்பே அத்தகையதுதான். கோடானு கோடி உழைப் பாளி மக்களிடையே மறைந்து கிடக்கின்ற வற்ருத வளம் கொழிக்கும் அறிவுச் சக்தியைப் பயன்படுத்தும் வேலேயில் தான் எமது முயற்சிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

ஒரே ஒரு உண்மையான மனிதத்துவம் பாட்டாளி வர்க்க மனிதத்துவம் தான். நமது உலகத்தின் சமுதாய