பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்தவர் சங்கீதம்

இரவு. எனினும், தென் இத்தாலியின் அங்நேரத்திய அற்புதமான வானத்திற்கு - நீல நிறமான ஒளியும் அன்பு தவழும் மண்ணின் மணம் கலந்த கதகதப்பும் இணைந்து விளங்குகிற இந்த ஆகாயத்திற்கு - இரவு என்கிற வார்த்தை அவ்வளவு பொருத்தமல்ல. இந்த ஒளி சூரியனிட மிருந்து பிறந்து பொன்மயச் சங்திரனுல் பிரதிபலிக்கப் பெற்று எங்கும் பாய்வதாகத் தோன்றவில்லை. ஆனல், சுறு சுறுப்போடும் திறமையோடும் மனிதனல் பயிராக்கப்படுகிற சோர்வில்லாத,வளம் மிகுந்த, மண்ணிலிருந்து பரவுவதாகத் தான் தோன்றியது. வெள்ளியில் பொதிந்தவை போல் திகழும் ஆலிவ் மர இல்ேகளிலிருந்தும் மலேச்சரிவுகளில் உள்ள கல் சுவர்களி லிருந்தும், ஒளி மெளனமாகப் பெருகி ஒடுகிறது. மண் சரிந்து விழுவதைத் தடுப்பதற்காகத் தான் அச் சுவர்கள் அங்கு உள்ளன. அவை மலைச் சரிவுகளேத் தட்டையான மேல் தளங்களாக ஒழுங்கு படுத்துகின்றன. அவற்றில் தானியம், மொச்சை, உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ் ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. கொடி முந்திரித் தோட்டமும், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற் றின் தோப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. முயற்சியும்