பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

தேர்ச்சியும் நிறைந்த உழைப்பு எவ்வளவு இங்கே செல வீடப் பட்டிருக்கிறது! ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய வெள்ளி மயமான மூடுபனியின் ஊடாக ஆரஞ்சு, மஞ்சள் கிறப் பழங்கள், நட்சத்திரங்கள் மலர்ந்த வானம் போன்ற தோற்றத்தை பூமிக்கு அளித்தபடி பளபளக்கின்றன. பூமி, அதில் உழுது பயிரிடுகிறவர்களால் ஏதோ ஒரு விழா விற்காக இனிமையாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது: அவர்கள் ஒய்வு பெறுவதில் இரவு நேரத்தைக் கழித்து விட்டு, "மகிழ்ச்சி கொண்டாடவும் ஆனந்தமாக இருக்கவும் காலேயில் கதிரவனுடன் விழித்தெழுவார்கள்

என்று யாரும் எண்ணக்கூடும்.

பரி பூரண அமைதி கிலவுகிறது. பூமியில் உள்ள ஒவ் வொன்றும் அசைவற்று இருக்கிறது. ஆகவே, அவை எல்லாம் மிக உயர்ந்த கலேளுன் ஒருவனுல் செதுக்கப்பட்டி ருக்குமோ அல்லது, வெண்கலத்தையும் லே மய வெள்ளி யையும் சேர்த்து வார்க்கப் பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இங்கு நிலவும் பூரணமான அமைதியும் அழகும், உலகத்தின் அற்புதங்களே எல்லாம் ஆக்குகின்ற வற்ருத உழைப்புச் சக்தியைப் பற்றி வெற்றிக்களிப்புடன் என்னும்படி தாண்டுகின்றன. வலிமை மிக்க உழைப்புச் சக்தி இன்னும் கொஞ்ச காலத்தில், துர வடக்கில் உள்ள கிலத்தைக் கூட வருஷம் முழுவதும் மனிதனுக்குப் பயன் படும்படி செய்து விடும் மிருகங்களே அடக்கி ஒடுக்குவது போல் அதையும் மனிதசக்தி அடக்கி விடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது. மகா அற்புதங்களேச் செய்கிறவனை மனிதனேப் பற்றியும், அவன் தனது குழங்தைகளுக்காக கிர்மாணிக்கிற சிறந்த எதிர்காலம் பற்றியும், மகிழ்வோடும் தியான உணர்வோடும், (பிரஞ்சுக் காரர்கள் கூறுவது போல் இவ்வார்த்தையைக்கூற என்னே அநுமதியுங்கள்') காம் எண்ண நேரிடுகிறது. -