பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்தவர் சங்கீதம் 39

விஞ்ஞானிகளின் உருவங்களும் முகங்களும் கினேவில் எழுகின்றன ...... காமா நதியின் மேல் திரத்தில் உள்ள பொட்டாஷியம் சுரங்கங்கள் பற்றி டி. என். பிர்யா னிஷ்னி கோவ் சொன்னது மீண்டும் கினைவுக்கு வருகிறது. முன்பு கண்ட பெரியார்கள் இப்போது கண்முன் தோன்று கிருர்கள்: சிறந்த மனிதரான ஐ.பி. பாவ்லோவ், 1906-ல் மான்ட்ரீல் நகரில் தம்முடைய ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த ரூதர்போர்டு, ரஷ்யாவின் விஞ்ஞானத்தை உரு வாக்கியவர்கள் ஆகிய பலர் ஒருவர் பின் ஒருவராக மனக் கண்ணில் தோன்றுகிருர்கள்; அவர்களுடைய புத்தகங் களின் கினேவும் வருகிறது. கமது கினேவுத் திரையில் அதி சயிக்கத் தக்க விஞ்ஞான விளைவுகளும், உலக விஞ்ஞானி களின் முன்னேறிச் செல்லும் உழைப்பும் சித்திரம் போல நிழலிடுகின்றன. அதீத பயங்கரக் காட்சிகளுக்கும் கடை முறை உண்மைகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி கம்ப முடியாத வேகத்தில் குறைந்து வருகிற யுகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிருேம். É.

岑 率 萃

சிறிது காலத்துக்கு முன்பு, நமது பிராங்திய இயற்கை வரலாற்று அறிஞர்களில் ஒருவரான, கோஸ்லோவைச் சேர்ந்த தோழர் ஆண்ட்ரீ பாக்ரேவ், அற்புதம் சிருஷ்டிக் கும் ஆற்றல் பெற்ற இருவர் பற்றி தமது கடிதம் ஒன்றில் எனக்கு ஞாபகப் படுத்தியிருந்தார். தாமாகவே பயின்று தாவர நிபுணராகி விட்ட லூதர் பர்பாங்க் என்னும் அமெரிக்கரும், நம் காட்டு மேதை ஜவான் விளாடிமி ரோவிச் மிச்சுரினும் தான் அவர்கள். தோழர் பாக்ரேவின் கடிதத்தின் ஒரு பகுதியை நான் உரிமையோடு பிரசுரிக் கிறேன். கான் இப்படிச் செய்வதனால் அவர் என் மீது மன வருத்தம் கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்.