பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

"பழச் செடிகளின் கலப்பு ஒட்டு முறைகளைப் பற்றிய ரகசியங்கள் பலவற்றை லூதர் பர்பாங்க் கண்டு பிடித்தார் என்பதை நாம் அறிவோம். அவற்றின் பயணுக அவர் தயாரித்த பல ரகச் செடிகள் - பலன்தரும் சக்தி, இடத் துக்கு ஏற்றபடி ஒத்துப் போகும் பண்பு, மணம், பூச்சிகள், கோய்கள் முதலியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தன்மை ஆகிய விஷயங்களில்-பிரமிக்கத் தக்கவையாக இருக்கின்றன. அது மட்டுமல்ல; அவை எல்லாம் அள விலும் தன்மையிலும் இயற்கைக்கு மாறுபட்ட அதிசயங் களாகவே விளங்குகின்றன. அவை வட அமெரிக்கா பூரா வையும் அதிக வளமானதாக ஆக்கியுள்ளன. அவர் சிருஷ்: டித்துள்ள தின்னக் கூடிய 'சப்பாத்துக் கள்ளி'கள் தங்கள் முட்களே இழந்து விட்டன. கல் மாதிரி கடினமான கொட்டைகளே, இலே போல் லேசானதாக மாறும்படி செய்து விட்டார் பர்பாங்க். தோட்டக்கலே மேதையான பர்பாங்கின் திறமையை மதிப்பிட மேற் கூறிய உதாரணங் களே போதும்.

"சோவியத் யூனியனில், டாம்பால் மாகாணத்தைச் சேர்ந்த கோஸ்லோவ் நகருக்கு அருகே, கிலம் நெடுங்கால மாகவே வண்டல் படிந்து அடை மண்ணுகி, வில்லோ, பாப்லார், மேப்பிள் முதலிய மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து கிடக்கிற இடத்தில் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்பவரும் தாவரங்களில் புது இனங்களே உண்டு பண்ணு கிறவருமான ஜவான் விளாடிமிரோவிச் மிச்சுரினின் காற்றுப் பண்னே இருக்கிறது. அது சிறியது, எனினும் மிக விநோதமானது.

"அதிக உஷ்ணமோ அதிகக் குளிரோ இல்லாத கலிபோர்னியாவின் சாதகமான சீதோஷ்ண நிலையில் லூதர் பர்பாங்க் காற்று வளர்த்தார். ரஷ்யாவின் மத்திய