பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்தவர் சங்கீதம் 43

'மிச்சுரின் இப்பொழுது கிழவர் ஆகிவிட்டார். அவருக்கு வயது 78. ஆயினும் இன்னும் அவர் உழைத்துக் கொண்டு தான் இருக்கிருர், தாவர உலகத்தின் மர்மங்களே மூடியிருக்கும் திரைகளே இப்பொழுதும் அவர் ஒன்றின் பின் ஒன்ருகக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிரு.ர்.”

★ 安 , ★

பலவகைப்பட்ட அற்பமான, அன்ருடத் தொல்லே களிலிருந்து உள்ளம் விடுதலே பெற்று ஒய்வு பெறுவதற்குத் துணைபுரியும் இந்த இரவின் நிசப்தம், அகில உலக மனிதர் களின் உழைப்பில் எழும் கம்பீரமான இசையை சரித் திரத்தில் புது யுகமாக விளங்கும் காலத்தின் சிறப்பான கீதத்தை, எனது காட்டின் தொழிலாளி மக்கள் துணி வுடன் ஆரம்பித்து வைத்துள்ள பாடலே. உள்ளத்தில் முணு முனுப்பது போல் தோன்றியது.

ஆனல், திடீரென்று, இரவின் ஆழ்ந்த அமைதியின் ஊடே, அறிவில்லாத சுத்தியல் எதுவோ பலமாக அடிக் கத் தொடங்குகிறது. ஒன்று, இரண்டு, மூன்று, பத்து, இருபது அடிகள் - தெளிந்த தூய தண்ணிரில் திரளான சேறு வந்து விழுவது போல், காட்டுத்தனமான ஊளையும் கிரீச்சிடும் ஒலியும், கதறலும், கடகடப்பும், வீரிடுதலும், அரைத்தல் ஒலியும் பாய்கின்றன. மனிதத்தன்மை இல்லாத குரல்கள், குதிரையின் கனைப்பைப் போன்று, காற்றைப் பிளக்கின்றன. பன்றி உறுமினல் போன்ற ஓசையும் கனைப் பொலியும், ராட்சசத் தவளைகளின் காமக் கூச்சலும் நம் காதைத் தாக்குகின்றன. அவமானப் படுத்துகின்ற வெறித் தனமான இந்தக் கூச்சல்கள் எல்லாம் லேசாகப் புலன கின்ற ஏதோ ஒரு தாளத்துக்குக் கட்டுப்பட்டுள்ளன: இந்தப் பேய்க் கூத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிஷ: