பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன்னுரை

மாக்ஸிம் கார்க்கியின் கதை எழுதும் ஆற்றல் பற்றிக் தமிழ் நாட்டினர் நன்கு அறிவர். காவல் இலக்கியத்துக்கு அவர் செய்துள்ள சேவை பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். கட்டுரை இலக்கியத்தில் அவருடைய சாதனைகளை இங்குள்ளவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் மொழிபெயர்ப்புக்கள் அதிகமாக இதுவரை வெளிவரவில்லை. -

கார்க்கி எவ்வளவோ கட்டுரைகள் எழுதியிருக்கிரு.ர். தனது இலக்கியக் கொள்கைகளே விளக்கவும்-விமர்சகர் களுக்குப் பதில் அளிக்கவும் - சோவியத் ரஷ்யாவின் வளர்ச்சியையும் சாதனைகளையும் சுட்டிக் காட்டவும்-தன் நாட்டைக் குை ற கூறியவர்களுக்கும், பரிகசித்தவர்களுக் கும், கண்டித்தவர்களுக்கும் - தன் நாட்டு எழுத்தாளர் களுக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்தவும் - உலக எழுத்தாளர் களுக்கு உண்மை ஒளியை உணர்த்தவும்-இளம் எழுத்தாளர் களுக்கு வழி காட்டவும் அவர் கட்டுரைகள் எழுதினர்.

கார்க்கியின் நடையின் காம்பீர்யமும், சொல்லின் கூர்மையும், கருத்துச் செறிவும், அவற்ருேடு தாராளமாகக் கலந்துள்ள கிண்டலும் கேலியும் நம் கவனத்தைக் கவர் கின்றன.

கார்க்கியின் சிந்தனைச் செல்வத்தைத் தமிழில் தரும் பணியை நிறைவேற்றுவதில் எனக்கு நெல்லே பப்ளிஷிங் ஹவுஸ் பங்கு அளித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்; பெருமை கொள்கிறேன்; நன்றி செலுத்துகிறேன்.

வல்லிக்கண்ணன்.